எனது தோட்டத்தில் அணில்களின் அட்டகாசம் குறித்து இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மிளகாய்ப் பொடிக்கு பயந்து அணில்கள் வராமல் இருந்தாலும், மிளகாயின் தாக்கம் செடிகளை பாதித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு, செடிகள் அனைத்தும் பட்டுப் போயின. அதன் பின், செடி வைக்கும் ஆர்வமும் குறைந்து போனது. இப்பொழுது தொட்டிகளில் இருக்கும் செடிகள் இவைதாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி
Grape Tomato எனப்படும் சிறியவகை தக்காளி
சேப்பங்கிழங்கு - Eddo Arbi
கிரேப் வகை தக்காளி பழங்கள்
இப்போதும், அணில்களின் அட்டகாசம் தொடர்கிறது. கொட்டைகளையும், விதைகளையும் குளிர் காலத்திற்காக சேமிக்க படையெடுக்கிறார்கள். சரி...செடி வளர்க்க இவர்கள் விடப் போவதில்லை, அவர்களேனும் விதைகளையும் கொட்டைகளையும் சேமிக்க செடி தொட்டிகளை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.