Thursday, July 14, 2016

Niagara Falls - Bird Kingdom நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே இருக்கும் பறவைகள் சரணாலயம்

Bird Kingdom - நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருக்கும் உள்ளரங்கு பறவைகள் சரணாலயம். இங்கு பல வகையான பறவைகள், ஊர்வன, விலங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பறவைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, சில பறவைகள் கூடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


உள்ளரங்கு பறவைகள் சரணாலயம் இருக்கும் இந்தக் கட்டிடம் தான் 1907 ம் ஆண்டு கனடாவில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்காரை (Concrete) கட்டிடம் என்று சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு, இக்கட்டிடம் புகழ் பெற்ற நயாகரா அருவி அருங்காட்சியகமாக (Niagara Falls Museum) விளங்கியது. இந்த அருங்காட்சியகத்தில் எகிப்திய அரசர் ரெமெஸ்ஸஸ் (King Ramesses I) அவர்களது பதப்படுத்தப்பட்ட உடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அது எகிப்திற்கே திரும்ப அனுப்பப்பட்டு விட்டது. இப்போதும் இங்கு சில எகிப்திய சின்னங்கள், உருவங்கள் காட்சிப் பொருட்களாய் வைக்கப்பட்டுள்ளன.





 இவை தவிர, இங்கு இன்னும் பல பழங்காலப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

பழங்கால வானொலி பெட்டி (Radio)


தட்டச்சு இயந்திரம் (Type writer)


 தொலைநோக்கி (Telescope)


அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் பறவைகள் 


 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல வகையான ஆமைகள்









 



அர்ஜென்டின கருப்பு/வெள்ளை டெகு(Argentine Black & White Tegu)

 

 டிராகன் (Bearded Dragon)



 பர்மிய மலைப்பாம்பு (Burmese Python)


 மலைப்பாம்பு (Boa Constrictor)


 மற்றோர் வகை மலைப்பாம்பு (Ball Python)


 Tarantula என்றழைக்கப்படும் ஒரு வகையான பெருஞ் சிலந்தி


 ஒரு வகை தவளை

  

பல வண்ண கிளிகள்

முகம் காட்ட மறுத்து அமர்ந்திருக்கும் ஒரு கிளி (Yellow Naped Amazon)






 

ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி (African Grey Parrot )

 

கூக்கபுரா பறவை (kookaburra )


 பல வண்ண கிளிகள்










இங்கு கண்ட இன்னும் சில பறவைகள் குறித்து அடுத்த பதிவில் காணலாம்.

No comments:

Post a Comment