Monday, September 21, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில்...(10)

வெள்ளை நிறத்தில் மலர்ந்து மணக்கும் புதினா மலர்



 காராமணி சுண்டல் கொடியில் வந்திருக்கும் சிறு காய்கள்



 Seed Ball - விதைப் பந்து.
உரம், களிமண் மற்றும் விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட விதைப் பந்து.
எனது மகன் பள்ளியில்  கோடை விடுமுறையின் போது நடந்த முகாமின் போது தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வழங்கப்பட்ட விதைப்பந்து.



விதைப் பந்திலிருந்து வந்திருக்கும் செடி. அன்று வழங்கப்பட்ட விதைப்பந்தில், காய்கறி விதையும், மலர் விதையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது என்ன செடி என்று தெரியவில்லை. இது என்ன செடி என்று அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.


 பாகல் கொடி


 சாமந்தி மலர் செடி


 மிளகாய் மலர். குடை மிளகாயா, சாதா மிளகாயா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


2 comments:

  1. உங்க மகனும் தோட்டத்தை அடிக்கடி எட்டிப் பார்க்கிறாரா :)

    குட்டிகுட்டிச் செடிகள் பார்க்க அழகா இருக்கு முகில்.

    ReplyDelete
  2. ஆம் தோழி. செடிகளுக்கு நீரூற்றுவதில் குட்டிக்கு ஆர்வம் உண்டு.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

    ReplyDelete