Showing posts with label ducks. Show all posts
Showing posts with label ducks. Show all posts

Monday, June 8, 2015

Swimming Ducklings - வாத்துக் குஞ்சுகள்




 வாத்துகள் மற்றும் இதர நீர்வாழ் பறவைகட்கு, அவற்றின் வால் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அதன் உதவியுடன் இப்பறவைகளால் தங்களது இறக்கைகள் முழுவதும் எண்ணெய் தடவிக் கொள்ள இயலும். இந்த சுரப்பியின் பெயர் Preen Gland அல்லது uropygial gland. எண்ணெய்யை தங்களது அலகு மற்றும் தலையில் எடுத்துக் கொண்டு, அவற்றின் இறகுகள் முழுதும் தடவிக் கொள்ளும். இதன் மூலம் இப்பறவைகளின் இறகுகள் நீர் புகா தன்மையை (waterproof) பெறும். நீர் புகா தன்மையுடைய இறகுகள் கொண்டு இப்பறவைகள் எளிதாக நீரில் நீந்தவும், மூழ்கவும் முடிகிறது.

வாத்துக் குஞ்சுகளால், பிறந்ததுமே நீரில் நீந்த முடியும். ஆனால், அவற்றிற்கு எண்ணெய் சுரப்பிகள் இருக்காது. இதனால், தாய் வாத்து தன்னுடைய உடலிலிருக்கும் எண்ணெயை தன் குஞ்சுகளின் உடலில் தடவி, அவை எளிதாகவும், ஆபத்தின்றி நீந்தவும் உதவுகின்றது.

இத்தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி.

Saturday, June 6, 2015

Sleeping Ducks - வாத்துகளின் உறக்கம்









வாத்துகளால் நீரில் நீந்தியபடியே உறங்க முடியும். இரவில் உறங்கும் போது, வாத்துகள் ஒரு கூட்டமாகவே, வரிசையாக அமர்ந்த நிலையில் உறங்கும். ஒரு வரிசையின் இரு ஓரங்களிலும் அமர்ந்திருக்கும் வாத்துகள், தங்களது சுற்றுப்புறத்தில் கேட்கும் மெலிதான ஒலிகள் அல்லது அசைவுகளையும் கண்டு கொள்ளும். ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்து தனது ஒரு கண்ணை திறந்து வைத்த நிலையிலேயே உறங்கும்.மற்றோர் கண் மூடி இருக்கும்.

ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்துகளின் மூளையின் ஒருபகுதி நல்ல விழிப்புடன் கூடிய நிலையிலும், மற்றொரு பகுதி உறக்க  நிலையிலும் இருக்கும். ஒரு பகுதி மூளை மட்டும் விழிப்புடன் இருந்தாலும், அப்பகுதி சுற்றுச்சூழலின் மீது 100 சதவிகிதம் கவனத்துடன் இருக்கும். இத்தகைய தன்மையின் மூலம், ஒரு வாத்தானது தன்னை மட்டும் காத்துக் கொள்வதோடு நில்லாமல், தன் கூட்டத்தில் உள்ள மற்ற வாத்துகளையும் காக்கிறது.

ஒரே வாத்தே இந்த காவல் பொறுப்பில் ஈடுபடுவது கிடையாது. ஒரு நான்கைந்து வாத்துகள் சேர்ந்து வரிசையாக உறங்குகின்றன எனில், ஒவ்வொரு வாத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. முதல் வாத்து ஒரு அரைமணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால், அடுத்த அரைமணி நேரம் வேறோர் வாத்து, வரிசையில் முதலாக வந்து அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது. இதனால், அக்கூட்டத்தின் மற்ற வாத்துகள், எவ்வித தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்குகின்றன.

நன்றி, இணையம்



Tuesday, June 2, 2015

Missing Ducklings - காணாமற் போன வாத்துக் குஞ்சுகள்

இரண்டு வாரத்திற்கு முன்பு  ஒரு வாத்து தன் குஞ்சுகளுடன் இருக்கும் படங்களை பகிர்ந்திருந்தேன். நேற்று அதே போல் ஒரு வாத்தினையும், அதனுடன் இரண்டே இரண்டு வாத்துக் குஞ்சுகள் மட்டுமே இருந்தன. மற்ற குஞ்சுகள் என்னவாயின என்று தெரியவில்லை. இது அதே வாத்து தான் என எண்ணுகிறேன்.

குளிரினை தாக்குப் பிடிக்க முடியாது போனதோ, அல்லது வேறு உயிரினங்கட்கு இரையானதோ, அல்லது தாயை விட்டு வழி தவறி சென்று விட்டனவோ தெரியவில்லை.



******************************************************

மேலுள்ள படங்களில் இருப்பது வேறோர் வாத்துக் குடும்பம். வாத்து தன் குஞ்சுகளுடன் என்ற பதிவில் கூறியிருந்த வாத்தும் அதன் குஞ்சுகளும் நலமாய் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி இருப்பதனால் ஏற்பட்ட குழப்பம்.

அவற்றின் புகைப்படம் :