Monday, December 16, 2013

நிகழ்வுகள்










தமிழில் புகைப்படக்கலை                           (PiT Photography in Tamil) வலைப்பூ நடத்திய நிகழ்வுகள் புகைப்படப் போட்டிக்கான என் பதிவு.

Monday, August 26, 2013

Leaves...

பூமி மகளுக்கு
இறை தந்தை
சீதனமாய் அளித்த
மரகத ஆபரணங்கள் -
இலைகள் !!!


        
                   - பி.தமிழ் முகில்
                     26.08.2013








Thursday, August 22, 2013

"The earth laughs in flowers" - Ralph Waldo Emerson

புன்னகை தவழும் 
பொன்னெழில் பூவையரே
உங்கள் புன்னகை ஒளியை சற்று 
மாந்தர்களின் உள்ளங்களில் 
விரைவாய்  பாய்ச்சிடுங்களேன் -
வேற்றுமை மறைந்த 
புன்னகைகளின் ஒளியில் - உலகமே
ஒளிமயமாய்  விளங்கட்டுமே  !!!

Sunday, August 18, 2013

Beautiful Flowers



















வண்ணங்கள்  ஆயிரம்

வரமாய்  பெற்று - தன்

வனப்பினில்  காண்போர்

விழி விரியச் செய்யும்

வாச  மலர்கள் !!!

Smiling Beauties

சிந்தும்   சிரிப்பில்

சிந்தை  கவரும்

சிங்காரப்  பதுமையரோ !

அன்றி – இறைவனவன்

சிந்தனை தனில் பிறந்த

சித்திரப்   பாவையரோ

சிரிக்கும்   சின்னப்பூ  ஆயினரோ !!!

                                  - பி. தமிழ் முகில்