Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution. - Ansel Adams
Thursday, May 28, 2015
Tuesday, May 26, 2015
Friday, May 22, 2015
Black Squirrel - 2 - கருப்பு அணில்
இப்பதிவின் முந்தய பகுதி Black Squirrel-1
நன்றி, இணையம்.
http://heritagetoronto.org
dailymail.co.uk
fcps.edu
buzzle.com
அணில்களுக்கு மிகவும் அமைதியான, ஆரவாரமில்லாத வாழ்விடம் தேவையில்லை. இவை மனிதர்கள் இருக்கும் இடங்களில் சகஜமாக வாழும். அணில்கள் நம் வீட்டுத் தோட்டங்கள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் காணப்படும்.
கோடை காலங்களில், இவற்றின் கூடுகளை இனம் காண்பது கடினம். ஏனெனில், இவை உயரமான மரங்களில், கிளைகளினூடே பசுமையான இலைகளை கொண்டே தங்களது கூடுகளை அமைக்கின்றன. இதனால், மரத்தின் இலைகளா, அல்லது அணில் கூடுகளா என்று இனம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால், இலைகள் அனைத்தும் உதிரும் இலையுதிர் காலத்திலும், இலைகள் அனைத்தும் உதிர்ந்து வெறும் கிளைகள் மட்டும் காணப்படும் குளிர் காலத்திலும் அணிலின் கூடுகளை எளிதாக அடையாளம் காணலாம்.
சாம்பல் நிற அணில்களின்( Gray Squirrel) மரபணுவில் (DNA) ஏற்படும் ஒற்றைப் பிறழ்வினால் (Single Mutation) கருப்பு அணில்கள் (Black Squirrel) உருவாகின்றன. இந்த அணில்களின் பெருக்கத்தால், சிகப்பு மற்றும் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.
மற்ற அணில்களை விட இவற்றிற்கு இருக்கும் தனிச் சிறப்பு, இவற்றின் கருப்பு நிறம். மற்றபடி, இந்த வகை அணில்கள், சாம்பல் நிற அணில்களின் குணாதிசயங்களையே கொண்டிருக்கும்.மரங்களில் கூடு கட்டி வாழும். மரப் பொந்துகளிலும், நிலத்துக்கு அடியிலும் தங்களது உணவை பதுக்கி வைக்கும்.
இவற்றின் அடர் கருப்பு நிறத்தினால், இவ்வகை அணில்கள் காட்டில் இருக்கும் மரங்களின் இடையே தாவுகையில் உருமறைப்பு (camouflage) செய்ய ஏதுவாக அமைகிறது. இதனால் தங்களை தங்களது எதிரிகளிடமிருந்து எளிதில் காத்துக் கொள்கின்றன.
White Oak,
American Beech, American Elm, Red Maple and Sweetgum ஆகிய மரங்களில் இவை கூடு கட்டி வாழும்.
இந்த அணில்களுக்கு நீச்சல் திறனும் உண்டு.
நன்றி, இணையம்.
http://heritagetoronto.org
dailymail.co.uk
fcps.edu
buzzle.com
Thursday, May 21, 2015
Black Squirrel -1 கருப்பு அணில்
கருப்பு நிற அணில்கள், சாம்பல் நிற அணில்களின் வகையை சார்ந்தவை ஆகும். இவ்வகை அணில்களை சாம்பல் நிற அணில்கள் வசிக்கும் இடங்களில் காணலாம். இந்த அணில்களின் கருப்பு நிறம், அவை காய்ந்த மரப் பட்டைகள் மற்றும் சருகுகளில் ஓடும் போது, அல்லது பதுங்கும் போது எதிரிகளால் இனங்கண்டு கொள்ள இயலாத அளவிற்கு, ஓர் தற்காப்பு அரணாக விளங்குகிறது.
பொதுவாக, கருப்பு நிறம் சூட்டினையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொள்ளும். இந்த அணில்களின் கருநிற உரோமங்கள், சூட்டினை தக்க வைத்துக் கொள்கின்றன. இவ்வகை அணில்களால், சாம்பல் நிற அணில்களை விட சற்று அதிகமாகவே குளிரினை தாக்குப் பிடிக்க முடியும்.
இவ்வகை அணில்கள் கனடாவின் ஒன்ரோறியோ ( Ontario ) மாகாணத்திலும், அமெரிக்காவின் ஒஹையோ ( Ohio ), மேரிலாண்ட் (Maryland), மிச்சிகன் (Michigan), இண்டியானா (Indiana), வர்ஜீனியா (Virginia), வாஷிங்டன் டி.சி (Washington, D.C.), விஸ்கான்ஸின் (Wisconsin), மின்னெசோட்டா (Minnesota), மற்றும் பென்ஸில்வேனியா (Pennsylvania) ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகிறது.
இந்த அணில்களின் கருப்பு நிறத்திற்கு , மெலனின் ( melanin) என்ற நிறமியே காரணம் ஆகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் மொத்த அணில்களின் எண்ணிக்கையில், பத்தாயிரம் அணில்களில் ஒரு அணில் மட்டுமே கருப்பு அணிலாக இருக்கிறது. இவ்வகை அணில்களை கண்டால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப் படுகிறது.
அணில்கள் தங்களது உணவான கொட்டைகள் மற்றும் விதைகளை மண்ணுக்குள் பதுக்கி வைக்கும் பழக்கம் கொண்டவை. தங்களது மோப்ப சக்தியை பயன்படுத்தி, பிற்காலத்தில் தங்களது உணவை மண்ணுக்குள் இருந்து எடுத்து உண்ணும். சமயங்களில், அங்ஙனம் பதுக்கி வைக்கப்படும் கொட்டைகள் அணில்களால் எடுக்கப் படாமலேயே இருக்கவும் வாய்ப்புண்டு.இதனால்,மரங்கள் வளர்ப்பில் அணில்களின் பங்கு அதிகம் .
Tuesday, May 19, 2015
Monday, May 18, 2015
Eastern Gray Squirrel - சாம்பல் நிற அணில்
சாம்பல்
நிற அணில்கள். இவை அணில்களில் ஒருவகை ஆகும். உண்மையில், இவற்றின் நிறம்,
சாம்பல் நிறமன்று. அது கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களின் கலவையே
ஆகும். இவற்றின் வால், நன்கு புசுபுசுவென்று இருக்கும். இந்த அணில்கள் மரம்
விட்டு மரம் தாவுகையில் கீழே விழுந்துவிடாது காக்க அவற்றின் வால்
உதவுகிறது.
இவ்வகை அணில்கள் மரத்துக்கு மரம் வேகமாக தாவும் தன்மையன. இதனால், இவை எளிதில் எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றன. இவற்றின் கால் நகங்கள் கூர்மையாக இருக்கும். இது, இவை மரங்களை பற்றிக் கொள்ள உதவியாக இருக்கின்றன. இவற்றின் கூர்மையான பற்கள் கொட்டைகளை எளிதாக உடைத்துத் திறக்க உதவி புரிகின்றன.
சிவப்பு நரிகள் (Red Fox), பருந்து (Hawks), ராக்கூன் (Racoon), பாம்புகள் (Snakes) போன்ற மிருகங்கட்கு இந்த அணில்கள் உணவாகின்றன. அணில்கள், சில மிருகங்கள் போல குளிர் காலம் முழுவதும் உறங்குவதில்லை (Hibernation) . ஆண்டு முழுவதும் இவை சுறுசுறுப்பாக தங்களுக்கான உணவை சேகரிக்கின்றன. தங்களது பற்களை மரப் பட்டைகள், நெகிழி (Plastic) மற்றும் உலோகங்களில் உராய்ந்து கொள்வதன் மூலம் அவற்றை கூர்மையாக்கிக் கொள்கின்றன.
அணில்கள் பலவகையான கொட்டைகளை உணவாக கொள்கின்றன. அணில்களின் உணவு முறை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகின்றன.
வசந்த காலத்தில் மரங்களில் புதிதாக துளிர்க்கும் மொட்டுக்களை உணவாக கொள்கின்றன. கோடை காலத்தில் மேப்பிள் மர விதைகள், சிலவகை பெர்ரி பழங்களையும் உண்கின்றன. இலையுதிர் காலத்தில் பலவகையான கொட்டைகளை உணவாக கொள்கின்றன. அதே சமயத்தில், குளிர் காலத்திற்கு தேவையான உணவுகளையும் இப்போது சேமித்துக் கொள்கின்றன.
இவை மோப்ப சக்தி அதிகம் கொண்ட காரணத்தால், குளிர் காலத்தில், மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் பெர்ரி பழங்களை உண்கின்றன. பறவைக்கு உணவு வைக்கும் கூண்டுகளில் ( Bird Feeder) இருக்கும் உணவுகளை எடுத்தும் சாப்பிடுகின்றன. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், பூச்சிகள், சிறு பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. மிகவும் அரிதாக, எலும்புகளை கூட உணவாகக் கொள்கின்றன அணில்கள்.
இந்த அணில்கள் 20 ஆண்டு காலம் வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவற்றின் உடல் 25 - 30 செ.மீ நீளமும், வால் 22- 25 செ. மீ நீளமும் இருக்கும். வயது முதிர்ந்த அணில் 400 முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக இருக்கும்.
இவ்வகை அணில்கள் மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. இவற்றின் கூடுகளின் பெயர் ட்ரே ( drey ). இந்த ட்ரே காய்ந்த சருகுகளாலும் குச்சிகளாலும் ஆனது. அணில்கள் மரப் பொந்துகளிலும், சில சமயங்களில் மனிதர்கள் வாழும் வீடுகளிலும் தங்களது கூட்டை அமைத்துக் கொள்கின்றன.
நன்றி, இணையம்
http://www.animalspot.net

Subscribe to:
Posts (Atom)