Monday, May 18, 2015

Eastern Gray Squirrel - சாம்பல் நிற அணில்




சாம்பல் நிற அணில்கள். இவை அணில்களில் ஒருவகை ஆகும். உண்மையில், இவற்றின் நிறம், சாம்பல் நிறமன்று. அது கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களின் கலவையே ஆகும். இவற்றின் வால், நன்கு புசுபுசுவென்று இருக்கும். இந்த அணில்கள் மரம் விட்டு மரம் தாவுகையில் கீழே  விழுந்துவிடாது காக்க அவற்றின் வால் உதவுகிறது.

இவ்வகை அணில்கள் மரத்துக்கு மரம் வேகமாக தாவும் தன்மையன. இதனால், இவை எளிதில் எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றன. இவற்றின் கால் நகங்கள் கூர்மையாக இருக்கும். இது, இவை மரங்களை பற்றிக் கொள்ள உதவியாக இருக்கின்றன. இவற்றின் கூர்மையான பற்கள் கொட்டைகளை எளிதாக உடைத்துத் திறக்க உதவி புரிகின்றன.

சிவப்பு நரிகள் (Red Fox),  பருந்து (Hawks), ராக்கூன் (Racoon), பாம்புகள் (Snakes) போன்ற மிருகங்கட்கு இந்த அணில்கள் உணவாகின்றன. அணில்கள், சில மிருகங்கள் போல குளிர் காலம் முழுவதும் உறங்குவதில்லை (Hibernation) . ஆண்டு முழுவதும் இவை சுறுசுறுப்பாக தங்களுக்கான உணவை சேகரிக்கின்றன. தங்களது பற்களை மரப் பட்டைகள், நெகிழி (Plastic) மற்றும் உலோகங்களில் உராய்ந்து கொள்வதன் மூலம் அவற்றை கூர்மையாக்கிக் கொள்கின்றன.

அணில்கள் பலவகையான கொட்டைகளை உணவாக கொள்கின்றன. அணில்களின் உணவு முறை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகின்றன.
வசந்த காலத்தில் மரங்களில் புதிதாக துளிர்க்கும் மொட்டுக்களை உணவாக கொள்கின்றன. கோடை காலத்தில் மேப்பிள் மர விதைகள், சிலவகை பெர்ரி பழங்களையும் உண்கின்றன. இலையுதிர் காலத்தில் பலவகையான கொட்டைகளை உணவாக கொள்கின்றன. அதே சமயத்தில், குளிர் காலத்திற்கு தேவையான உணவுகளையும் இப்போது சேமித்துக் கொள்கின்றன.

இவை மோப்ப சக்தி அதிகம் கொண்ட காரணத்தால், குளிர் காலத்தில், மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் பெர்ரி பழங்களை உண்கின்றன. பறவைக்கு உணவு வைக்கும் கூண்டுகளில் ( Bird Feeder) இருக்கும் உணவுகளை எடுத்தும் சாப்பிடுகின்றன.  உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், பூச்சிகள், சிறு பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. மிகவும் அரிதாக, எலும்புகளை கூட உணவாகக் கொள்கின்றன அணில்கள்.

இந்த அணில்கள் 20 ஆண்டு காலம் வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவற்றின் உடல் 25 - 30 செ.மீ நீளமும், வால் 22- 25 செ. மீ நீளமும் இருக்கும். வயது முதிர்ந்த அணில் 400 முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக இருக்கும்.

இவ்வகை அணில்கள் மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. இவற்றின் கூடுகளின் பெயர் ட்ரே ( drey ). இந்த ட்ரே காய்ந்த சருகுகளாலும் குச்சிகளாலும் ஆனது. அணில்கள் மரப் பொந்துகளிலும், சில சமயங்களில் மனிதர்கள் வாழும் வீடுகளிலும் தங்களது கூட்டை அமைத்துக் கொள்கின்றன.



 நன்றி, இணையம்
http://www.animalspot.net





6 comments:

  1. அணிலைப்பற்றிய பல தகவல்களை, அணிலைப்போலவே மிகவும் சுறுசுறுப்பாக, இணையத்திலிருந்து அழகாகத் திரட்டிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தமிழ்முகில்,

    ஆஹா, இரண்டு பேருடைய பதிவும் ஒன்றுபோல் ஆகிவிட்டதே. அவர்கள் போஸ் கொடுப்பதும் ஒரே மாதிரி இருக்கின்றது. இப்போதுதான் இவற்றின் பெயரைக் கேள்விப்படுகிறேன், தகவல்களுக்கும் நன்றி தமிழ்முகில்.

    நானும் மரத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் அணில் படம் எடுத்து வச்சிருக்கேன். எங்கேன்னு தேடிப்பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி. இருவரது பதிவும் அணில் பற்றியே அமைந்து விட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

      Delete
  3. அணில் படமும், தகவலும் அருமை.....மரத்தில் அமர்ந்து இருக்கும் அணில் என்னை பார்க்க வந்தீர்களா என கேட்பது போல அமர்ந்து இருக்கிறது......சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. தன்னைத் தான் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என்ற பயத்திலேயே அது அமர்ந்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

      Delete