Thursday, June 25, 2015

Mourning Dove

  • Mourning Dove  என்றழைக்கப்படும் இப்புறா, தமிழில் ஆமைப் புறா, புலம்பும் புறா,கரோலினா புறா, மழை புறா  என்று பல  பெயர்களில் அழைக்கப் படுகிறது.
  •  ஊஉஊஉ என்று துக்கம் அனுசரிப்பது போல சப்தமிடுவதால், இவை புலம்பும் புறா என்றழைக்கப்படுகிறது.
  • அடர்ந்த காடுகளைத் தவிர அனைத்து இடங்களிலும் இப்புறாக்களை காணலாம்.
  • இப்புறாக்கள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் காணப் படுகின்றன.
  • இவை பெரும்பாலும் விதைகளையே உணவாகக் கொள்கின்றன. இவை தவிர, சமயங்களில் பூச்சிகளையும், நத்தைகளையும் மிக அரிதாக உண்கின்றன.விதைகளில் கனோலா விதைகள், சூரியகாந்தி விதைகள், சோளம், கம்பு போன்றவைகள் இப்புறாக்களின் உணவாகும்.


தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி,
https://en.wikipedia.org/wiki/Mourning_dove
https://ta.wikipedia.org/wiki/ஆமைப் புறா
http://www.wild-bird-watching.com/Doves.html

Wednesday, June 24, 2015

Children's Park Memories - மலரும் நினைவுகள் - சிறுவர் பூங்கா

SeeSaw - ஏற்ற விளையாட்டு


Slide  - சறுக்கு விளையாட்டு


Swing - ஊஞ்சல்


Rope Merry Go Round - குடை இராட்டினம் / ரங்க இராட்டினம்


Wednesday, June 17, 2015

Sparrow - சிட்டுக் குருவி




சிட்டுக் குருவியின் கூடு.
 

பைன் மரத்தில் அமர்ந்திருக்கும் சிட்டுக் குருவிகள்


சிட்டுக் குருவிகள் நமக்கு நன்கு அறிமுகமான பறவையினம். இப்பறவைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்டாலும், இவை மனிதர்களுடன் பழகுவதில்லை. இக்குருவிகள் சுமார் 13 ஆண்டு காலம் உயிர் வாழும். இக்குருவிகள் பாஸரிடே ( Passeridae ) குடும்பத்தைச் சார்ந்தவை.

சிட்டுக் குருவிகள் உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும்
காணப்படுகிறது. நமது ஊர்களில் இச்சிட்டுக் குருவிக்கு வீட்டுக் குருவி, 
அடைக்கலக் குருவி, ஊர்க் குருவி என்று பல பெயர்கள் உண்டு. 
சிட்டுக் குருவிகள் விதைகள், பூச்சிகள், புழுக்களை உணவாக கொள்கின்றன. 

இப்பறவைகள் மரங்கள், வீடுகள், அடர்ந்த செடிப் புதர்களிலும் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இவற்றின் கூடுகள் வைக்கோல், குச்சிகள், தாள், இலைகள், புற்கள் என்று கிடைக்கும் அனைத்து பொருட்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும்.

கூடு கட்டி ஒரு வாரத்தில், பெண் குருவி முட்டையிடுகிறது. நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெள்ளை / பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண் குருவி முட்டைகளை அடைகாக்கும். 12 நாட்கள் முட்டைகளை அடைகாத்த பின் குருவிகள் முட்டைகளிலிருந்து வெளி வரும்.
குஞ்சு பொரித்த 15 முதல் 17 நாட்களில் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியே பறந்து விடுகின்றன.

நன்றி, இணையம்.

wild-bird-watching.com
https://ta.wikipedia.org/wiki/சிட்டு (பறவை)