Monday, June 8, 2015

Swimming Ducklings - வாத்துக் குஞ்சுகள்




 வாத்துகள் மற்றும் இதர நீர்வாழ் பறவைகட்கு, அவற்றின் வால் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அதன் உதவியுடன் இப்பறவைகளால் தங்களது இறக்கைகள் முழுவதும் எண்ணெய் தடவிக் கொள்ள இயலும். இந்த சுரப்பியின் பெயர் Preen Gland அல்லது uropygial gland. எண்ணெய்யை தங்களது அலகு மற்றும் தலையில் எடுத்துக் கொண்டு, அவற்றின் இறகுகள் முழுதும் தடவிக் கொள்ளும். இதன் மூலம் இப்பறவைகளின் இறகுகள் நீர் புகா தன்மையை (waterproof) பெறும். நீர் புகா தன்மையுடைய இறகுகள் கொண்டு இப்பறவைகள் எளிதாக நீரில் நீந்தவும், மூழ்கவும் முடிகிறது.

வாத்துக் குஞ்சுகளால், பிறந்ததுமே நீரில் நீந்த முடியும். ஆனால், அவற்றிற்கு எண்ணெய் சுரப்பிகள் இருக்காது. இதனால், தாய் வாத்து தன்னுடைய உடலிலிருக்கும் எண்ணெயை தன் குஞ்சுகளின் உடலில் தடவி, அவை எளிதாகவும், ஆபத்தின்றி நீந்தவும் உதவுகின்றது.

இத்தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி.

No comments:

Post a Comment