Friday, June 5, 2015

Sea Gull






Sea Gull பறவைகள் தமிழில் கடல் புறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகள் Laridae  என்ற குடும்பத்தை சார்ந்தவை. இப்பறவைகள் இறக்கைகள் கொண்ட துப்புரவு பணியாளர்கள் ( Scavengers ) என்று அழைக்கப்படுகின்றன. இவை மனிதரின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும், நோய் ஏற்படுத்தும் இறந்த மிருகங்கள், மற்றும்  இயற்கை கழிவுகளை ( Organic litter ) துப்புரவு செய்கின்றன. இப்பறவைகள் நண்டுகள், மீன்களை உணவாக கொள்கின்றன.

இக்கடல் புறாக்கள் மிகவும் புத்திசாலி பறவைகள். பழக்க வழக்கங்களை இவை எளிதாக கற்றுக் கொள்கின்றன. உதாரணமாக, இப்பறவைகள் ஓர் கூட்டமாக சேர்ந்து தங்களது கால்களை தரையில் தட்டி, மழை மண்ணை வந்து சேர்வது போன்ற ஒலியை எழுப்புகின்றன. இந்த ஒலியை கேட்டு மண்ணை விட்டு வெளியே வரும் மண் புழுக்களை உணவாக கொள்கின்றன.

இப்பறவைகளின் புத்திக் கூர்மைக்கு மற்றுமோர் உதாரணம்:
இப்பறவைகள்,  கடினமான ஓடுகளை உடைய மெல்லுடலிகளை ( Hard Shelled Molluscs ) உயரத்தில் பறந்தபடியே பாறைகளின் மேல் போட்டு அவற்றின் ஓடுகளை உடைத்து விடுகின்றன. அதன் பின், அந்த ஓட்டினுள் இருக்கும் உயிரிகளை உணவாக உட்கொள்கின்றன. சிப்பிகள், நத்தைகள் இவற்றின் உணவுகளில் அடங்கும். மேலும், விவசாய நிலங்களில் ஏர் கொண்டு உழுகையில், மண்ணிலிருக்கும் பூச்சி, புழுக்களையும் உணவாக கொள்கின்றன.


கடற் புறாக்கள் விசேஷ ஒலிகள் மற்றும் உடலசைவுகளின் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பு  செய்து கொள்கின்றன. இப்பறவைகளால் நல்ல நீர் , உப்பு நீர் என இருவகை நீர்களையும் அருந்த முடியும். இவற்றின் கண்களுக்கு மேல் தனித்துவம் வாய்ந்த ஒரு ஜோடி சுரப்பிகள் இருக்கின்றன.இந்த சுரப்பிகளின் உதவியுடன், உப்பினை தங்களது அலகின் வாயிலாக வெளியேற்றுகின்றன.

இத்தகவல்கள் யாவும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி,

http://www.onekind.org/be_inspired/animals_a_z/seagull/
 







    4 comments:

    1. கடல் புறாக்கள் பற்றிய படங்களும் விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

      ReplyDelete
      Replies
      1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

        Delete
    2. புதிய தகவல்கள்!! பகிர்வுக்கு நன்றி தமிழ்முகில்!

      ReplyDelete
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தோழி.

      ReplyDelete