Saturday, June 6, 2015

Sleeping Ducks - வாத்துகளின் உறக்கம்









வாத்துகளால் நீரில் நீந்தியபடியே உறங்க முடியும். இரவில் உறங்கும் போது, வாத்துகள் ஒரு கூட்டமாகவே, வரிசையாக அமர்ந்த நிலையில் உறங்கும். ஒரு வரிசையின் இரு ஓரங்களிலும் அமர்ந்திருக்கும் வாத்துகள், தங்களது சுற்றுப்புறத்தில் கேட்கும் மெலிதான ஒலிகள் அல்லது அசைவுகளையும் கண்டு கொள்ளும். ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்து தனது ஒரு கண்ணை திறந்து வைத்த நிலையிலேயே உறங்கும்.மற்றோர் கண் மூடி இருக்கும்.

ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்துகளின் மூளையின் ஒருபகுதி நல்ல விழிப்புடன் கூடிய நிலையிலும், மற்றொரு பகுதி உறக்க  நிலையிலும் இருக்கும். ஒரு பகுதி மூளை மட்டும் விழிப்புடன் இருந்தாலும், அப்பகுதி சுற்றுச்சூழலின் மீது 100 சதவிகிதம் கவனத்துடன் இருக்கும். இத்தகைய தன்மையின் மூலம், ஒரு வாத்தானது தன்னை மட்டும் காத்துக் கொள்வதோடு நில்லாமல், தன் கூட்டத்தில் உள்ள மற்ற வாத்துகளையும் காக்கிறது.

ஒரே வாத்தே இந்த காவல் பொறுப்பில் ஈடுபடுவது கிடையாது. ஒரு நான்கைந்து வாத்துகள் சேர்ந்து வரிசையாக உறங்குகின்றன எனில், ஒவ்வொரு வாத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. முதல் வாத்து ஒரு அரைமணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால், அடுத்த அரைமணி நேரம் வேறோர் வாத்து, வரிசையில் முதலாக வந்து அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது. இதனால், அக்கூட்டத்தின் மற்ற வாத்துகள், எவ்வித தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்குகின்றன.

நன்றி, இணையம்



2 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை. Sleeping Ducks போல தூங்காமல் இதை நான் படித்தேன். :)

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல ஐயா.

    ReplyDelete