Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution. - Ansel Adams
Friday, July 31, 2015
Tuesday, July 28, 2015
என் சின்னஞ்சிறு தோட்டத்தில் .....பகுதி 8
மலர்ந்திருக்கும் கத்தரிக்காய் செடி
இன்னும் சில மொட்டுக்கள்
உருளைக்கிழங்கு செடி
ஏனோ, இலைகள் அனைத்தும் பழுத்து உதிர ஆரம்பித்து விட்டன. செடிகளும் வலுவிழந்து சாய ஆரம்பிக்கின்றன. இருபது நாட்களுக்கு முன் நன்றாக செழிப்பாக இருந்த செடிகள் இப்போது துவண்டு போய் விட்டன. காரணம் தெரியவில்லை. அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன். ஒருவேளை, இடம் போதவில்லையோ ?
சற்றே வளர்ந்திருக்கும் பூண்டு
முளைத்து வரும் காராமணி சுண்டல் கொடி (Black Eyed Peas)
இஞ்சி செடி
தக்காளி செடிகள் உயரமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், இதிலும் இலைகள் மஞ்சள் நிறத்தில், துவண்டு போய் இருக்கின்றன. வெயிலும் சற்றூ அதிகமாக உள்ளது. வெயில் தான் செடிகள் துவண்டு போக காரணமோ ? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
Thursday, July 23, 2015
Tuesday, July 21, 2015
நயாகரா பயணத்தின் போது இரசித்த மலர்கள்
மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி, தம் வண்ணங்களால் பலரது எண்ணங்களை கவர்ந்து, மனங்களை கொள்ளை கொள்கின்றன. அப்படி என் மனத்தினை கொள்ளை கொண்ட சில வண்ண மலர்கள். நயாகரா பயணத்தின் போது, சாலைகளில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த சில மலர்கள், பேருந்திற்காக காத்திருந்த இடத்தில் கண்ட மலர்கள், ஒவ்வொரு இடமாக பார்த்து வருகையில் ஆங்காங்கே கண்ட அழகு மலர்களை எல்லாம் புகைப்படங்களாக என்னுடனே எடுத்து வந்தேன்.
சாமந்தி மலர்கள் - Marigold
இம்மலர்களின் பெயர் தெரியவில்லை.
மஞ்சள் வண்ண ரோஜாக்கள்.
செம்பருத்தி மலர்கள் - பல வண்ணங்களில்
இம்மலரின் பெயர் Fuchsia. பெண்களின் காதணிகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றனவாம். இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்.
இணையத்தில் இருந்து மற்றுமோர் புகைப்படம்
Thanks, http://www.ehow.com/list_7333145_flowers-hang-upside_down.html
இம்மலர்கள் Angel's trumpet என்றழைக்கப் படுகின்றன. அபாரமான வாசனையுடன் இருந்தன இம்மலர்கள்.
கல் வாழை
இப்பதிவுடன் நயாகரா பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)