Thursday, July 9, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி - குதிரை இலாட அருவி (Horse Shoe Falls)

White Water Walk பார்த்துவிட்டு, அடுத்ததாக சென்றது, Horse Shoe Falls.  இந்த அருவியின் வடிவம் குதிரையின் இலாடம் போன்று இருப்பதால், இதற்கு குதிரை இலாட அருவி ( Horse Shoe Falls ) என்று பெயர். 

                                 

இந்த Horse Shoe Falls ற்கு எதிரில் இருப்பது, Table Rock Welcome Centre. நயாகரா அருவியின் வரவேற்பு மையம். இங்கு, மற்ற இடங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டுகள், 4 D திரைப்படம் (Niagara's fury), மேலிருந்து கொட்டும் நயாகரா அருவியின் அழகை கீழிருந்து இரசிக்க கவனிப்பு மேடைகள் (Journey Behind the Falls) இவையனைத்தும் இருக்கின்றன. இவற்றைக் குறித்து அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.



வரவேற்பு மையத்தின் எதிரில் இருந்து பார்த்தால், கனடாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் தெரியும். இந்தப் பாலம் Niagara Falls International Rainbow Bridge என்றழைக்கப் படுகிறது. கப்பலில் (Cruise) செல்கையில், இந்த பாலத்தின் கீழ் அழகான வானவில் தெரியும்.

2 comments:

  1. நீங்க சொல்லியிருப்பதை எல்லாம் குறித்துக்கொள்ள வேண்டும். நன்றி முகில்.

    ReplyDelete
    Replies
    1. குறித்துக் கொள்ளுங்கள் தோழி. நானும் என்னால் இயன்றவரை தகவல்களை தொகுத்து அளிக்கிறேன்.

      Delete