Sunday, July 5, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 7

இதற்கு முந்தய தோட்டப் பதிவில், கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு செடிகள் படங்களை பகிர்ந்திருந்தேன். அச்செடிகள் சற்றே வளர்ந்து உள்ளன. அவற்றின் புகைப்படங்கள்.இவை மற்ற செடிகள்.

Spring Onion  என்றழைக்கப்படும் வெங்காயத்தாள்.
                                             

இப்போது தான் முளைத்து வரும் பூண்டு. பைகளில் மாற்றி வைத்துள்ள தக்காளி நாற்றுகள்புதினா


குளிர் காலத்திற்குப் பின் தளிர்த்து வரும் ரோஜா செடி


ஸ்ட்ராபெரி செடி

தனித்தனி தொட்டிகளில் மாற்றப்பட்டுள்ள மிளகாய் நாற்றுகள்

8 comments:

 1. உருளை & கத்தரி செடிகளைப் பார்க்கும்போது நல்ல விளைச்சல் வரும்போலத் தெரியுது :) மத்த செடிங்களும் சூப்பரா வந்திருக்கு முகில்.

  மிளகாய் விதை போட்டீங்களா ? இல்லை நாற்று வாங்கினீங்களா ?

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி.

   விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டால் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. Self - watering முறை ஏதேனும் இருக்குமா என்று பார்க்கிறேன். ziploc bag முறை ஒன்றும், plastic bottle முறை ஒன்றும் பார்த்தேன். ஏதாவது ஒன்றை செய்துவிட்டு செல்ல வேண்டும். நீங்கள் ஊருக்கு செல்கையில் செடிகளுக்கு நீரூற்ற ஏதேனும் முறைகளை கையாள்வீர்களா? அறியத் தாருங்கள் தோழி.

   மிளகாய் விதை தான் போட்டேன் தோழி. சமையலுக்கு பயன்படுத்தும் வற்றலை கிள்ளி விதைகளை தூவினேன். குடை மிளகாய் விதைகளையும் காய வைத்து போடுவதுண்டு.

   தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

   Delete
 2. தமிழ்முகில்,

  நம்பிக்கையான நெருங்கிய தோழிகள் இருந்தால் அவர்களிடம் சாவியைக் கொடுத்து நம் வீட்டிற்கு வந்து தண்ணீர் ஊற்றச் சொல்லலாம். அல்லது வீடு திரும்பும்வரை அவர்களிடம் கொடுத்துவிட்டுப் போகலாம்.

  ஒரு பாட்டிலில் சொட்டுசொட்டா தண்ணீர் வெளியேர்ற மாதிரி ஒரு துளை மட்டும் போட்டு நீர் நிரப்பி செடிக்குப் பக்கத்தில் கட்டிவிடலாம் என ஒரு ஷோவில் எப்போதோ பார்த்த ஞாபகம். இதுவா நீங்க சொல்ற ப்ளாஸ்டிக் பாட்டில் முறை ?

  சென்ற வருடம் மட்டுமே எனக்கு இந்தப் பிரச்சினை. தக்காளி செடிகள் மட்டும் காய்ஞ்சு போச்சு. வெங்காயம், பருப்புகீரை இரண்டும் தாக்குப் பிடித்திருந்தன.

  ReplyDelete
  Replies
  1. புதிய இடம் என்பதால் அவ்வளவாக யாரையும் தெரியாது. தெரிந்த ஒருவரும் அதே சமயத்தில் ஊருக்கு செல்கிறார்.

   பாட்டில் முறையை தான் முயற்சிக்க போகிறேன்.நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள முறையே தான் தோழி.

   செடிகள் நன்றாக இருக்க வேண்டும். அல்லது, ஊருக்குப் போகுமுன்னே காய்கள் காய்த்து விட வேண்டும். பார்க்கலாம்.

   Delete
 3. செடிகள் அழகா வளர்ந்திருக்குங்க. மிளகாய் & குடை மிளகாய், தக்காளி விதை போட்டு முளைத்த செடிகள் வளர்ந்து விளைச்சல் தந்திருக்கா?? இங்கே நான் பாகற்காய் விதை ஒரு முறை போட்டு, முளைத்த செடி கொஞ்சம் வளர்ந்து, பூ விட்டது, ஆனால் பிஞ்செல்லாம் பிடிக்கலை, வாடிப்போய்விட்டது..உங்க அனுபவத்தைச் சொன்னால் எனக்கு உபயோகமா இருக்கும்.
  பி.கு. - நான் வாங்கும் காய்களெல்லாம் வால்மார்ட் மற்றும் அமெரிக்க சூப்பர் மார்க்கெட் காய்கள் தான், ஃபார்மர்ஸ் மார்க்கெட் காய்கள் அல்ல...இந்த குறிப்பு சித்ராக்காவுக்கு! ;) :)

  ReplyDelete
  Replies
  1. விதை போட்டு வளர்ந்த குடை மிளகாய் காய்த்துள்ளது தோழி. தக்காளி காய்த்ததில்லை. நான் தாமதமாக விதைகளை போட்டிருப்பேன் என எண்ணுகிறேன். சென்ற வருடம், செடி நன்றாக வளர்ந்த சிறிது நாட்களிலேயே குளிர் காலம் வந்துவிட்டது.

   பார்க்கலாம். இவ்வாண்டு எப்படி என்று.

   நானும் வால்மார்ட்டில் வாங்கும் காய்களின் விதைகளை தான் போடுவேன். குடை மிளகாய், தக்காளி இவையெல்லாம் வால்மார்ட்டில் வாங்கியவை தான். வற்றல் இந்தியன் கடைகளில் வாங்கி, மிளகாய் செடிக்கு விதைகளை தூவி விடுவேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

   Delete
 4. பாக்க பாவமாத்தான் இருக்கு, ஏதாவது ஒரு ஐடியாவ செயல்படுத்துங்க முகில்.

  எப்பவோ போட்ட விதையிலிருந்து(farmers market) தக்காளி செடிகள் இன்னமும் வந்துட்டுதான் இருக்கு. நாந்தான் பிடுங்கிடுவேன். மிளகாய் செடிகள் ஜம்ஜம்னு வந்து பூக்களும் வந்தாச்சு. பாவக்கா செடிக்கு(மகி கவனிக்க : இது நம்ம ஊர் கடையில இருந்து எடுத்து வந்தது) குச்சிகள் வாங்கி வந்து தொட்டியில சொருகி வச்சி படர விட்டிருக்கேன். பார்க்கலாம் காய்க்குதான்னு.

  ReplyDelete
  Replies
  1. சரி தோழி. செய்து விடலாம். பாட்டில் முறை தான் செயல்படுத்த போகிறேன்.

   தக்காளி, ஒரு சிறு பழத்தை பிழிந்து விட்டாலே, நிறைய செடிகள் வரும். சில சமயம், அழுகிப் போன ஒரு தக்காளியின் விதைகளிலிருந்து 20 - 30 செடிகள் கூட வர வாய்ப்பிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் பல தோழி.

   Delete