Wednesday, June 8, 2016

என் சின்னஞ்சிறு தோட்டம் - 2016

 முள்ளங்கி & காரட் செடிகள்

 பீன்ஸ் கொடி

 வெங்காயத் தாள்

 வெந்தயம்

 இவ்வாண்டின் முதல் அறுவடை



  பீன்ஸ் கொடியில் முதல் மலர்கள்


மன மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுத்து வந்த தொட்டித் தோட்டத்தில், இன்று ஏதோ ஒன்று நுழைந்து அட்டகாசம் செய்து விட்டது. அனைத்து தொட்டிகளும் தோண்டப்பட்டு, செடிகள் பிய்த்தும், வேரோடு பிடுங்கியும் கிடந்தது. அணிலின் அட்டகாசமாகத் தான் இருக்கும் என் எண்ணுகிறேன்.
 இணையத்தில் தேடிய போது, அணில்களின் வருகையை கட்டுப்படுத்த, மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் தூவலாம். பூண்டினை கசக்கி தொட்டிகளில் போட்டு வைத்தாலும் அந்த வாசனைக்கு அணில்கள் வராது என்று படித்தேன். அதனால், இன்று மிளகாய்த்தூளினை தொட்டிகளில் தூவி உள்ளேன். பார்க்கலாம்.


How to get rid of squirrels ?

4 comments:

  1. அணில்கள் சில சமயம் அட்டகாசம்தான் செய்கின்றன. 4 நாள் வீட்டில் இல்லை, அதற்குள் மொட்டு விட்டிருந்த ரோஜா, கெர்பரா எல்லாம் காலி. உரம் ஒரு பெரிய பேக்கட் கிழித்து நாசம்!! :(

    கத்தரி, டேலியா இலைகளையும் விட்டு வைக்கலை..ஜாக்கிரதையா இருங்க!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி. நலமா ?

      செடிகளின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் போலுள்ளது.

      இப்போது மிளகாய் தூள் தான் அனைத்து தொட்டிகளிலும் தூவியுள்ளேன். தங்களுக்கு வேறு ஏதேனும் வழிமுறைகள் தெரிந்தாலும் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  2. முகில்,

    நல்லா கவனிச்சு பாருங்க, எலியாகக்கூட இருக்கலாம்.

    எங்க வீட்டில் இருந்த தக்காளிப் பழங்களை எல்லாம் கடித்து, தொட்டிகளை சாய்த்துவிட்டு, அதிலுள்ள மண்ணைத் தோண்டி அட்டகாசம் செய்தது, ஏதோ பறவையாய் இருக்கும்னே நெனச்சேன். கடைசியில்தான் தெரிந்தது அது ஒரு பெரிய எலினு. அத்தோடு தக்காளி வைப்பதையே விட்டுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆறாவது மாடி... எலிகள் அதுவும் நம்மூர் பெருச்சாளிகள் போல வர வாய்ப்பிருக்கிறதா? தெரியவில்லையே ! அணில்கள் சுவற்றில் ஏறி வருவதை பார்த்திருக்கிறேன்.

      இப்போது அனைத்து தொட்டிகளிலும் மிளகாய் பொடி தூவி உள்ளேன். தூவி ஒரு வாரம் ஆகிறது. செடிகள் பத்திரமாய் இருந்தால் போதும். தக்காளி இப்போது தான் சிறு நாற்றுகளாக உள்ளன. இனி தான் தொட்டியில் மாற்றி வைக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete