Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution. - Ansel Adams
Friday, June 12, 2015
Wednesday, June 10, 2015
Bunny rabbit
முயல்கள் பாலூட்டிகள் இனத்தை சார்ந்தவை ஆகும். இவை Lagomorpha வரிசையையும், Leporidae குடும்பத்தையும் சாரும். பெண் முயல்கள் டோ (doe) என்றும், ஆண் முயல்கள் பக் (buck) என்றும் அழைக்கப்படுகிறது. முயல் குட்டிகள் கிட் (kit) என்றழைக்கப்படுகின்றன.
முயல்கள் கூட்டமாக வாழும் தன்மையன. முயல் கூட்டத்திற்கு பெயர் ஹெர்ட் (herd). முயல்கள் நிலத்துக்கடியில் வளைகளில் வசிக்கின்றன. இவ்வளைகள் பர்ரோ (burrow) ஆகும். நிறைய வளைகள் சேர்ந்தது வார்ரன் (warren) என்றழைக்கப்படும்.
முயல்கள் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொள்ளும்.இவற்றின் உணவில் புற்கள், மலர்கள் மற்றும் பயிர்களும் அடங்கும்.
ஆண்டுக்கு 2 முதல் 3 முறை முயல்கள் குட்டிகள் போடும். ஒவ்வொரு முறையும் 4 முதல் 6 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். முயல் குட்டிகள் பிறக்கையில் கண்கள் மூடியும், மேற்தோலில் அடர்த்தியான முடிகள் இல்லாமலும் இருக்கும். முயல்களுக்கு 28 பற்கள் இருக்கும். வாழ்நாள் முழுதும் இவற்றின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
முயல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தங்களது குட்டிகளுக்கு பாலூட்டும். முயலின் பால் ஊட்டச்சத்து நிறைந்தது. முயல் குட்டிகள் வேகமாக வளர்ந்து விடும்.
காட்டு முயல்கள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும். வீட்டில் வளர்க்கப்படும் முயல்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
விடியல் மற்றும் இரவடையும் வேளைகளில் முயல்கள் சுறுசுறுப்பாக இயங்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்கும்.
நன்றி, இணையம்.
Monday, June 8, 2015
Swimming Ducklings - வாத்துக் குஞ்சுகள்
வாத்துகள் மற்றும் இதர நீர்வாழ் பறவைகட்கு, அவற்றின் வால் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். அதன் உதவியுடன் இப்பறவைகளால் தங்களது இறக்கைகள் முழுவதும் எண்ணெய் தடவிக் கொள்ள இயலும். இந்த சுரப்பியின் பெயர் Preen Gland அல்லது uropygial gland. எண்ணெய்யை தங்களது அலகு மற்றும் தலையில் எடுத்துக் கொண்டு, அவற்றின் இறகுகள் முழுதும் தடவிக் கொள்ளும். இதன் மூலம் இப்பறவைகளின் இறகுகள் நீர் புகா தன்மையை (waterproof) பெறும். நீர் புகா தன்மையுடைய இறகுகள் கொண்டு இப்பறவைகள் எளிதாக நீரில் நீந்தவும், மூழ்கவும் முடிகிறது.
வாத்துக் குஞ்சுகளால், பிறந்ததுமே நீரில் நீந்த முடியும். ஆனால், அவற்றிற்கு எண்ணெய் சுரப்பிகள் இருக்காது. இதனால், தாய் வாத்து தன்னுடைய உடலிலிருக்கும் எண்ணெயை தன் குஞ்சுகளின் உடலில் தடவி, அவை எளிதாகவும், ஆபத்தின்றி நீந்தவும் உதவுகின்றது.
இத்தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
நன்றி.
Saturday, June 6, 2015
Sleeping Ducks - வாத்துகளின் உறக்கம்
வாத்துகளால் நீரில் நீந்தியபடியே உறங்க முடியும். இரவில் உறங்கும் போது, வாத்துகள் ஒரு கூட்டமாகவே, வரிசையாக அமர்ந்த நிலையில் உறங்கும். ஒரு வரிசையின் இரு ஓரங்களிலும் அமர்ந்திருக்கும் வாத்துகள், தங்களது சுற்றுப்புறத்தில் கேட்கும் மெலிதான ஒலிகள் அல்லது அசைவுகளையும் கண்டு கொள்ளும். ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்து தனது ஒரு கண்ணை திறந்து வைத்த நிலையிலேயே உறங்கும்.மற்றோர் கண் மூடி இருக்கும்.
ஓரத்தில் அமர்ந்திருக்கும் வாத்துகளின் மூளையின் ஒருபகுதி நல்ல விழிப்புடன் கூடிய நிலையிலும், மற்றொரு பகுதி உறக்க நிலையிலும் இருக்கும். ஒரு பகுதி மூளை மட்டும் விழிப்புடன் இருந்தாலும், அப்பகுதி சுற்றுச்சூழலின் மீது 100 சதவிகிதம் கவனத்துடன் இருக்கும். இத்தகைய தன்மையின் மூலம், ஒரு வாத்தானது தன்னை மட்டும் காத்துக் கொள்வதோடு நில்லாமல், தன் கூட்டத்தில் உள்ள மற்ற வாத்துகளையும் காக்கிறது.
ஒரே வாத்தே இந்த காவல் பொறுப்பில் ஈடுபடுவது கிடையாது. ஒரு நான்கைந்து வாத்துகள் சேர்ந்து வரிசையாக உறங்குகின்றன எனில், ஒவ்வொரு வாத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. முதல் வாத்து ஒரு அரைமணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால், அடுத்த அரைமணி நேரம் வேறோர் வாத்து, வரிசையில் முதலாக வந்து அமர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது. இதனால், அக்கூட்டத்தின் மற்ற வாத்துகள், எவ்வித தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்குகின்றன.
நன்றி, இணையம்
Friday, June 5, 2015
Sea Gull
Sea Gull பறவைகள் தமிழில் கடல் புறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகள் Laridae என்ற குடும்பத்தை சார்ந்தவை. இப்பறவைகள் இறக்கைகள் கொண்ட துப்புரவு பணியாளர்கள் ( Scavengers ) என்று அழைக்கப்படுகின்றன. இவை மனிதரின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும், நோய் ஏற்படுத்தும் இறந்த மிருகங்கள், மற்றும் இயற்கை கழிவுகளை ( Organic litter ) துப்புரவு செய்கின்றன. இப்பறவைகள் நண்டுகள், மீன்களை உணவாக கொள்கின்றன.
இக்கடல் புறாக்கள் மிகவும் புத்திசாலி பறவைகள். பழக்க வழக்கங்களை இவை எளிதாக கற்றுக் கொள்கின்றன. உதாரணமாக, இப்பறவைகள் ஓர் கூட்டமாக சேர்ந்து தங்களது கால்களை தரையில் தட்டி, மழை மண்ணை வந்து சேர்வது போன்ற ஒலியை எழுப்புகின்றன. இந்த ஒலியை கேட்டு மண்ணை விட்டு வெளியே வரும் மண் புழுக்களை உணவாக கொள்கின்றன.
இப்பறவைகளின் புத்திக் கூர்மைக்கு மற்றுமோர் உதாரணம்:
இப்பறவைகள், கடினமான ஓடுகளை உடைய மெல்லுடலிகளை ( Hard Shelled Molluscs ) உயரத்தில் பறந்தபடியே பாறைகளின் மேல் போட்டு அவற்றின் ஓடுகளை உடைத்து விடுகின்றன. அதன் பின், அந்த ஓட்டினுள் இருக்கும் உயிரிகளை உணவாக உட்கொள்கின்றன. சிப்பிகள், நத்தைகள் இவற்றின் உணவுகளில் அடங்கும். மேலும், விவசாய நிலங்களில் ஏர் கொண்டு உழுகையில், மண்ணிலிருக்கும் பூச்சி, புழுக்களையும் உணவாக கொள்கின்றன.
கடற் புறாக்கள் விசேஷ ஒலிகள் மற்றும் உடலசைவுகளின் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பு செய்து கொள்கின்றன. இப்பறவைகளால் நல்ல நீர் , உப்பு நீர் என இருவகை நீர்களையும் அருந்த முடியும். இவற்றின் கண்களுக்கு மேல் தனித்துவம் வாய்ந்த ஒரு ஜோடி சுரப்பிகள் இருக்கின்றன.இந்த சுரப்பிகளின் உதவியுடன், உப்பினை தங்களது அலகின் வாயிலாக வெளியேற்றுகின்றன.
இத்தகவல்கள் யாவும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
நன்றி,
http://www.onekind.org/be_inspired/animals_a_z/seagull/
கடற் புறாக்கள் விசேஷ ஒலிகள் மற்றும் உடலசைவுகளின் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பு செய்து கொள்கின்றன. இப்பறவைகளால் நல்ல நீர் , உப்பு நீர் என இருவகை நீர்களையும் அருந்த முடியும். இவற்றின் கண்களுக்கு மேல் தனித்துவம் வாய்ந்த ஒரு ஜோடி சுரப்பிகள் இருக்கின்றன.இந்த சுரப்பிகளின் உதவியுடன், உப்பினை தங்களது அலகின் வாயிலாக வெளியேற்றுகின்றன.
இத்தகவல்கள் யாவும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
நன்றி,
http://www.onekind.org/be_inspired/animals_a_z/seagull/
Wednesday, June 3, 2015
Subscribe to:
Posts (Atom)