Monday, September 21, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில்...(10)

வெள்ளை நிறத்தில் மலர்ந்து மணக்கும் புதினா மலர்



 காராமணி சுண்டல் கொடியில் வந்திருக்கும் சிறு காய்கள்



 Seed Ball - விதைப் பந்து.
உரம், களிமண் மற்றும் விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட விதைப் பந்து.
எனது மகன் பள்ளியில்  கோடை விடுமுறையின் போது நடந்த முகாமின் போது தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வழங்கப்பட்ட விதைப்பந்து.



விதைப் பந்திலிருந்து வந்திருக்கும் செடி. அன்று வழங்கப்பட்ட விதைப்பந்தில், காய்கறி விதையும், மலர் விதையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது என்ன செடி என்று தெரியவில்லை. இது என்ன செடி என்று அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.


 பாகல் கொடி


 சாமந்தி மலர் செடி


 மிளகாய் மலர். குடை மிளகாயா, சாதா மிளகாயா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Thursday, August 20, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில்....(9)

புதினா மொட்டு


இஞ்சி செடி

 மிளகாய் செடிகள்


 அறுவடை செய்த உருளைக்கிழங்குகள்


 தக்காளி மலர்


இம்முறை கடையில் வாங்கிய கொத்தமல்லியில் கொஞ்சமாக வேர்ப் பகுதி இருந்தது. அதை மண்ணில் ஊன்றி வைக்க சில தண்டுகள் தளிர்த்து வருகின்றன.


Tuesday, July 28, 2015

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் .....பகுதி 8

மலர்ந்திருக்கும் கத்தரிக்காய் செடி



 இன்னும் சில மொட்டுக்கள்


உருளைக்கிழங்கு செடி

 ஏனோ, இலைகள் அனைத்தும் பழுத்து உதிர ஆரம்பித்து விட்டன. செடிகளும் வலுவிழந்து  சாய ஆரம்பிக்கின்றன. இருபது நாட்களுக்கு முன் நன்றாக செழிப்பாக இருந்த செடிகள் இப்போது துவண்டு போய் விட்டன. காரணம் தெரியவில்லை. அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன். ஒருவேளை, இடம் போதவில்லையோ ?

சற்றே வளர்ந்திருக்கும் பூண்டு


 முளைத்து வரும் காராமணி சுண்டல் கொடி (Black Eyed Peas)



இஞ்சி செடி


தக்காளி செடிகள் உயரமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், இதிலும் இலைகள் மஞ்சள் நிறத்தில், துவண்டு போய் இருக்கின்றன. வெயிலும் சற்றூ அதிகமாக உள்ளது. வெயில் தான் செடிகள் துவண்டு போக காரணமோ ? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.