Wednesday, September 21, 2016

என் தோட்டத்தில்....

எனது தோட்டத்தில் அணில்களின் அட்டகாசம் குறித்து இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மிளகாய்ப் பொடிக்கு பயந்து அணில்கள் வராமல் இருந்தாலும், மிளகாயின் தாக்கம் செடிகளை பாதித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு, செடிகள் அனைத்தும் பட்டுப் போயின. அதன் பின், செடி வைக்கும் ஆர்வமும் குறைந்து போனது. இப்பொழுது தொட்டிகளில் இருக்கும் செடிகள் இவைதாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி


 Grape Tomato எனப்படும் சிறியவகை தக்காளி


சேப்பங்கிழங்கு -  Eddo Arbi


 கிரேப் வகை தக்காளி பழங்கள்

இப்போதும், அணில்களின் அட்டகாசம் தொடர்கிறது. கொட்டைகளையும், விதைகளையும் குளிர் காலத்திற்காக சேமிக்க படையெடுக்கிறார்கள். சரி...செடி வளர்க்க இவர்கள் விடப் போவதில்லை, அவர்களேனும் விதைகளையும் கொட்டைகளையும் சேமிக்க செடி தொட்டிகளை பயன்படுத்திக்  கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.

2 comments:

  1. முகில்,

    எங்க வீட்டுசெம்பருத்தியைப் பூக்க விடாமல் செய்துகொண்டிருப்பது இந்த அணில்தான். என்ன செய்யிறதுன்னு ஒன்னுமே புரியல. மிளகாயின் காரம் எரித்துவிடும்தான். பூண்டு அரைத்து இலைகளில் தடவினால் வராமல் இருக்குமா?

    வள்ளிக்கிழங்கு கொடி எங்கே கிடைத்தது? இங்கும் சில வீடுகளில் பார்த்திருக்கிறேன். தக்காளி அழகா இருக்கு. சேப்பங்கிழங்கை நட்டு வச்சி செடி வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி. நலமா ?

      பூண்டின் வாசனைக்கும் வராது என்று இணையத்தில் படித்தேன். பூண்டினை அரைத்து இலைகளில் தடவி விடலாம்...மண்ணில் அரைத்த பூண்டினை நீர் கலந்து தெளித்துப் பார்க்கலாம். நான் இனிமேல் செய்ய முடியாது. குளிர் ஆரம்பித்து விட்டது இங்கு.

      வள்ளிக்கிழங்கு, கடையில் வாங்கிய கிழங்கில் முளைத்து வர ஆரம்பித்திருந்தது. முளைத்து வரும் இடத்தில், கிழங்கினை கொஞ்சம் சதைப்பகுதியுடன் வெட்டி, மண்ணில் வைத்தேன். வளர்ந்து விட்டது. உருளைக்கிழங்கிலும், முளைத்து வரும் கிழங்கின், சிறிது சதைப் பகுதியுடன் வெட்டி வைத்தாலே நன்கு தழைத்து வருமாம். சேப்பங்கிழங்கு, முளை விட்ட கிழங்கினை மண்ணில் ஊன்றி வைத்தேன். அவ்வளவு தான். ஆனால், சேப்பங்கிழங்குக்கு, முழு கிழங்கையும் மண்ணில் ஊன்றினேன்.

      தக்காளி, இது க்ரேப் தக்காளி வகை, On the vine tomatoes, Hot house tomatoes, Roma tomatoes என்று இங்கு கிடைக்கும் தக்காளி வகைகள் அனைத்தின் விதைகளையும் போட்டு பார்த்தேன். அனைத்தையும் அணில்கள் வேரோடு பிடுங்கி விட்டன. மீண்டும் ஊன்றி வைத்தது, வளரவில்லை.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete