மலர்ந்திருக்கும் கத்தரிக்காய் செடி
இன்னும் சில மொட்டுக்கள்
உருளைக்கிழங்கு செடி
ஏனோ, இலைகள் அனைத்தும் பழுத்து உதிர ஆரம்பித்து விட்டன. செடிகளும் வலுவிழந்து சாய ஆரம்பிக்கின்றன. இருபது நாட்களுக்கு முன் நன்றாக செழிப்பாக இருந்த செடிகள் இப்போது துவண்டு போய் விட்டன. காரணம் தெரியவில்லை. அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன். ஒருவேளை, இடம் போதவில்லையோ ?
சற்றே வளர்ந்திருக்கும் பூண்டு
முளைத்து வரும் காராமணி சுண்டல் கொடி (Black Eyed Peas)
இஞ்சி செடி
தக்காளி செடிகள் உயரமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால், இதிலும் இலைகள் மஞ்சள் நிறத்தில், துவண்டு போய் இருக்கின்றன. வெயிலும் சற்றூ அதிகமாக உள்ளது. வெயில் தான் செடிகள் துவண்டு போக காரணமோ ? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
முகில்,
ReplyDeleteகத்தரிப் பூவைப் பார்த்த சந்தோஷம் அடுத்துள்ள படங்களில் அடிபட்டுப் போனது. எதனால் தெரியலையே. தேவையான ஊட்டச் சத்து இல்லையோ ? பூச்சி என்றால் தொட்டியில் பூண்டு நட்டு வையுங்க. வேர் பரவ இடம் & தேவையான அளவு மண் இல்லையென்றாலும் வெளிறி இருக்கும்.
ஒருவேளை நீங்க ஊருக்குப் போவதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்திருக்குமோ !!
வெயிலும் சற்று அதிகமாகவே உள்ளது. இப்போது செடிகளை நிழலில் மாற்றி உள்ளேன். மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.
ReplyDeleteசமயங்களில், எங்கள் வீட்டு சுட்டி செடிகளுக்கு நீரூற்றும் ஆவலில் குழாயிலிருந்து வெந்நீர் பிடித்து ஊற்றி விடுகிறார். அதுவும் காரணமாக இருக்கலாம்.
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.