அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.
இத்தகவல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.
நயாகராவிற்கு செல்லும் Go Transit இரயில்.
தரையிலிருந்து 70 அடி தூரத்திற்கு, உயர்த்தி/ இறக்கியில் ( Elevator) கீழிறங்கி, பின் சுரங்கப் பாதை வழியாக 73 அடி நடந்தால், 305 அடி தூரமுள்ள படிகளுடன் கூடிய போர்ட் வாக் ( Board Walk ).
இப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி, yelp.com
![]() | |
| சுரங்கப் பாதை |
ஓடும் நயாகரா ஆற்றினை இரசிக்க, இரண்டு மரத்தாலான மேடைகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இவ்வாற்றில் ஓடும் நீரின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 48 கிலோ மீட்டர் ஆகும்.
மேலே இருக்கும் இரண்டு படங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.
நன்றி, இணையம்.
niagaraparks.com
இந்த மர மேடையிலிருந்து பார்த்தால், 410 மில்லியன் வருட பழமை வாய்ந்த நயாகரா பள்ளத்தாக்கின் ( Niagara Gorge ) கற்பாறை அடுக்குகளை காணலாம்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் White Water Walk ற்கு எதிரில் இருக்கும் பத்தாயிரம் புத்தர் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.
இக்கோயில் சாம் - ஷான் கோயில் (Cham Shan Temple) என்றும் அழைக்கப் படுகிறது.


