அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.
இத்தகவல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.
நயாகராவிற்கு செல்லும் Go Transit இரயில்.
தரையிலிருந்து 70 அடி தூரத்திற்கு, உயர்த்தி/ இறக்கியில் ( Elevator) கீழிறங்கி, பின் சுரங்கப் பாதை வழியாக 73 அடி நடந்தால், 305 அடி தூரமுள்ள படிகளுடன் கூடிய போர்ட் வாக் ( Board Walk ).
இப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி, yelp.com
சுரங்கப் பாதை |
ஓடும் நயாகரா ஆற்றினை இரசிக்க, இரண்டு மரத்தாலான மேடைகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இவ்வாற்றில் ஓடும் நீரின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 48 கிலோ மீட்டர் ஆகும்.
மேலே இருக்கும் இரண்டு படங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.
நன்றி, இணையம்.
niagaraparks.com
இந்த மர மேடையிலிருந்து பார்த்தால், 410 மில்லியன் வருட பழமை வாய்ந்த நயாகரா பள்ளத்தாக்கின் ( Niagara Gorge ) கற்பாறை அடுக்குகளை காணலாம்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் White Water Walk ற்கு எதிரில் இருக்கும் பத்தாயிரம் புத்தர் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.
இக்கோயில் சாம் - ஷான் கோயில் (Cham Shan Temple) என்றும் அழைக்கப் படுகிறது.
நயாகரா போனீங்களா :) எவ்வளவோ முயற்சித்தும் இந்த வருடமும் போக முடியவில்லை.
ReplyDelete"நயாகராவிற்கு செல்லும் Go Transit இரயில் " ___ இது எங்கிருந்து போகிறது? எவ்வளவு நாட்கள் அங்கு தங்கினால் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும்? கொஞ்சம் விவரம் சொல்லுங்களேன் முகில், நன்றி !
ஆம் தோழி. கடந்த வெள்ளியன்று சென்று வந்தோம். நாங்கள் ஒரு நாள் மட்டும் சென்று வந்தோம்.
ReplyDeleteGo Transit - இது Ontario மாகாணத்தில் இயக்கப்படும் பஸ் மற்றும் இரயில் சேவை தோழி. மூன்று நாட்கள் தங்கினால் பொறுமையாக அனைத்தையும் பார்த்து இரசிக்கலாம்.
இங்கு falls தவிர butterfly conservatory, bird kingdom,botanical garden, cruise, 4d experience of the falls (niagara's fury) என்று பல attractions இருக்கின்றன தோழி.
இவற்றுள் நாங்கள் பார்த்த இடங்கள் பற்றியும், அவற்றின் புகை ப் படங்களை யும் விரைவில் பகிர்கிறேன் தோழி.
தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் பல தோழி.
தகவலுக்கு நன்றி முகில். நீங்கள் போன இடங்கள் பற்றிய தகவலையும் அறியும் ஆவலில் .....
ReplyDeleteவிரைவில் பதிகிறேன் தோழி.
Delete