Wednesday, June 10, 2015

Bunny rabbit








முயல்கள் பாலூட்டிகள் இனத்தை சார்ந்தவை ஆகும். இவை Lagomorpha வரிசையையும், Leporidae குடும்பத்தையும் சாரும். பெண் முயல்கள் டோ (doe) என்றும், ஆண் முயல்கள் பக் (buck) என்றும் அழைக்கப்படுகிறது. முயல் குட்டிகள் கிட் (kit)  என்றழைக்கப்படுகின்றன.

முயல்கள் கூட்டமாக வாழும் தன்மையன. முயல் கூட்டத்திற்கு பெயர் ஹெர்ட் (herd). முயல்கள் நிலத்துக்கடியில் வளைகளில் வசிக்கின்றன. இவ்வளைகள் பர்ரோ (burrow) ஆகும். நிறைய வளைகள் சேர்ந்தது வார்ரன் (warren) என்றழைக்கப்படும்.

முயல்கள் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொள்ளும்.இவற்றின் உணவில் புற்கள், மலர்கள் மற்றும் பயிர்களும் அடங்கும்.

ஆண்டுக்கு 2 முதல் 3 முறை முயல்கள் குட்டிகள் போடும். ஒவ்வொரு முறையும் 4 முதல் 6 குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். முயல் குட்டிகள் பிறக்கையில் கண்கள் மூடியும், மேற்தோலில் அடர்த்தியான முடிகள் இல்லாமலும் இருக்கும். முயல்களுக்கு 28 பற்கள் இருக்கும். வாழ்நாள் முழுதும் இவற்றின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

முயல்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தங்களது குட்டிகளுக்கு பாலூட்டும். முயலின் பால் ஊட்டச்சத்து நிறைந்தது. முயல் குட்டிகள் வேகமாக வளர்ந்து விடும்.

காட்டு முயல்கள்  10 ஆண்டுகள் வரை உயிர் வாழும். வீட்டில் வளர்க்கப்படும் முயல்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

விடியல் மற்றும் இரவடையும் வேளைகளில் முயல்கள் சுறுசுறுப்பாக இயங்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்கும்.

நன்றி, இணையம்.

2 comments:

  1. அழகோ அழகு! அதிலும் அந்த கடைசிக்கு முந்தையப் படம் மிக்க அழகு தோழி.
    என் backyaardilum ஒரு bunny உள்ளது, தெளிவாகப் படம் எடுப்பதற்குள் ஓடி விடுகிறது :)

    ReplyDelete
  2. சிறு அரவம் கேட்டாலும் துள்ளி ஓடி மறைந்து விடுகின்றன. சற்றே தூரத்தில் இருந்து அவை அறியா வண்ணம் எடுத்தால் தான் உண்டு. கடைசிக்கு முந்தய படம் கொஞ்சம் zoom செய்து எடுத்தது. எப்படி இருக்குமோ என்றெண்ணினேன். நன்றாக வந்துள்ளது.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

    ReplyDelete