Thursday, May 21, 2015

Black Squirrel -1 கருப்பு அணில்














கருப்பு நிற அணில்கள், சாம்பல் நிற அணில்களின் வகையை சார்ந்தவை ஆகும். இவ்வகை அணில்களை சாம்பல் நிற அணில்கள் வசிக்கும் இடங்களில் காணலாம். இந்த அணில்களின் கருப்பு நிறம், அவை காய்ந்த மரப் பட்டைகள் மற்றும் சருகுகளில் ஓடும் போது, அல்லது பதுங்கும் போது எதிரிகளால் இனங்கண்டு கொள்ள இயலாத அளவிற்கு, ஓர் தற்காப்பு அரணாக விளங்குகிறது.


பொதுவாக, கருப்பு நிறம் சூட்டினையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொள்ளும். இந்த அணில்களின் கருநிற உரோமங்கள், சூட்டினை தக்க வைத்துக் கொள்கின்றன. இவ்வகை அணில்களால், சாம்பல் நிற அணில்களை விட சற்று அதிகமாகவே குளிரினை தாக்குப் பிடிக்க முடியும்.

இவ்வகை அணில்கள் கனடாவின் ஒன்ரோறியோ ( Ontario ) மாகாணத்திலும், அமெரிக்காவின்  ஒஹையோ ( Ohio ),  மேரிலாண்ட் (Maryland), மிச்சிகன் (Michigan), இண்டியானா (Indiana), வர்ஜீனியா (Virginia), வாஷிங்டன் டி.சி (Washington, D.C.), விஸ்கான்ஸின் (Wisconsin), மின்னெசோட்டா (Minnesota), மற்றும் பென்ஸில்வேனியா (Pennsylvania)  ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகிறது.

இந்த அணில்களின் கருப்பு நிறத்திற்கு , மெலனின் ( melanin) என்ற நிறமியே காரணம் ஆகும்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் மொத்த அணில்களின் எண்ணிக்கையில், பத்தாயிரம் அணில்களில் ஒரு அணில் மட்டுமே கருப்பு அணிலாக இருக்கிறது. இவ்வகை அணில்களை கண்டால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப் படுகிறது.

அணில்கள் தங்களது உணவான கொட்டைகள் மற்றும் விதைகளை மண்ணுக்குள்  பதுக்கி வைக்கும் பழக்கம் கொண்டவை. தங்களது மோப்ப சக்தியை பயன்படுத்தி, பிற்காலத்தில் தங்களது உணவை மண்ணுக்குள் இருந்து எடுத்து உண்ணும். சமயங்களில், அங்ஙனம் பதுக்கி வைக்கப்படும் கொட்டைகள்   அணில்களால் எடுக்கப் படாமலேயே இருக்கவும் வாய்ப்புண்டு.இதனால்,மரங்கள் வளர்ப்பில் அணில்களின் பங்கு அதிகம் .

3 comments:

  1. ஆஹா, கருப்பு நிறத்தில் அணில்களா !!!!! இதுவரை பார்த்ததே இல்லை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //மரங்கள் வளர்ப்பில் அணில்களின் பங்கு அதிகம் .//

    :) சுவையான தகவல்கள்.

    //அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் மொத்த அணில்களின் எண்ணிக்கையில், பத்தாயிரம் அணில்களில் ஒரு அணில் மட்டுமே கருப்பு அணிலாக இருக்கிறது. இவ்வகை அணில்களை கண்டால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப் படுகிறது//

    அதிர்ஷடக்கார அணில்கள் ! :) தங்கள் மூலம் இங்கு பார்த்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete