Friday, May 22, 2015

Black Squirrel - 2 - கருப்பு அணில்

இப்பதிவின் முந்தய பகுதி  Black Squirrel-1











அணில்களுக்கு மிகவும் அமைதியான, ஆரவாரமில்லாத வாழ்விடம் தேவையில்லை. இவை மனிதர்கள் இருக்கும் இடங்களில் சகஜமாக வாழும். அணில்கள் நம் வீட்டுத் தோட்டங்கள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும்  காணப்படும்.  

கோடை காலங்களில், இவற்றின் கூடுகளை இனம் காண்பது கடினம். ஏனெனில், இவை உயரமான மரங்களில், கிளைகளினூடே பசுமையான இலைகளை கொண்டே தங்களது கூடுகளை அமைக்கின்றன. இதனால், மரத்தின் இலைகளா, அல்லது அணில் கூடுகளா என்று இனம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால், இலைகள் அனைத்தும் உதிரும் இலையுதிர் காலத்திலும், இலைகள் அனைத்தும் உதிர்ந்து வெறும் கிளைகள் மட்டும் காணப்படும் குளிர் காலத்திலும் அணிலின் கூடுகளை எளிதாக அடையாளம் காணலாம்.

சாம்பல் நிற அணில்களின்( Gray Squirrel) மரபணுவில் (DNA) ஏற்படும் ஒற்றைப் பிறழ்வினால் (Single Mutation) கருப்பு அணில்கள் (Black Squirrel) உருவாகின்றன. இந்த அணில்களின் பெருக்கத்தால், சிகப்பு மற்றும் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை பெருமளவில்  பாதிக்கப்படுகின்றது.

மற்ற அணில்களை விட இவற்றிற்கு இருக்கும் தனிச் சிறப்பு, இவற்றின் கருப்பு நிறம். மற்றபடி, இந்த வகை அணில்கள், சாம்பல் நிற அணில்களின் குணாதிசயங்களையே கொண்டிருக்கும்.மரங்களில் கூடு கட்டி வாழும். மரப் பொந்துகளிலும், நிலத்துக்கு அடியிலும் தங்களது உணவை பதுக்கி வைக்கும்.

இவற்றின் அடர் கருப்பு நிறத்தினால், இவ்வகை அணில்கள் காட்டில் இருக்கும் மரங்களின் இடையே தாவுகையில் உருமறைப்பு (camouflage) செய்ய ஏதுவாக அமைகிறது. இதனால் தங்களை தங்களது எதிரிகளிடமிருந்து எளிதில் காத்துக் கொள்கின்றன.

White Oak, American Beech, American Elm, Red Maple and Sweetgum ஆகிய மரங்களில் இவை கூடு கட்டி வாழும்.

இந்த அணில்களுக்கு நீச்சல் திறனும் உண்டு.

நன்றி, இணையம்.
http://heritagetoronto.org
dailymail.co.uk
fcps.edu
 buzzle.com

4 comments:

  1. அணில் புராணங்கள் அருமை.

    //இந்த அணில்களுக்கு நீச்சல் திறனும் உண்டு.//

    வியப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. கருப்பு அணிலை பார்த்தது இல்லை..இப்போது பார்த்து விட்டேன்...அழகு....அழகு...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete