Wednesday, June 17, 2015

Sparrow - சிட்டுக் குருவி




சிட்டுக் குருவியின் கூடு.
 

பைன் மரத்தில் அமர்ந்திருக்கும் சிட்டுக் குருவிகள்


சிட்டுக் குருவிகள் நமக்கு நன்கு அறிமுகமான பறவையினம். இப்பறவைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்டாலும், இவை மனிதர்களுடன் பழகுவதில்லை. இக்குருவிகள் சுமார் 13 ஆண்டு காலம் உயிர் வாழும். இக்குருவிகள் பாஸரிடே ( Passeridae ) குடும்பத்தைச் சார்ந்தவை.

சிட்டுக் குருவிகள் உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும்
காணப்படுகிறது. நமது ஊர்களில் இச்சிட்டுக் குருவிக்கு வீட்டுக் குருவி, 
அடைக்கலக் குருவி, ஊர்க் குருவி என்று பல பெயர்கள் உண்டு. 
சிட்டுக் குருவிகள் விதைகள், பூச்சிகள், புழுக்களை உணவாக கொள்கின்றன. 

இப்பறவைகள் மரங்கள், வீடுகள், அடர்ந்த செடிப் புதர்களிலும் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இவற்றின் கூடுகள் வைக்கோல், குச்சிகள், தாள், இலைகள், புற்கள் என்று கிடைக்கும் அனைத்து பொருட்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும்.

கூடு கட்டி ஒரு வாரத்தில், பெண் குருவி முட்டையிடுகிறது. நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெள்ளை / பழுப்பு நிறத்தில் இருக்கும். பெண் குருவி முட்டைகளை அடைகாக்கும். 12 நாட்கள் முட்டைகளை அடைகாத்த பின் குருவிகள் முட்டைகளிலிருந்து வெளி வரும்.
குஞ்சு பொரித்த 15 முதல் 17 நாட்களில் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியே பறந்து விடுகின்றன.

நன்றி, இணையம்.

wild-bird-watching.com
https://ta.wikipedia.org/wiki/சிட்டு (பறவை)  

2 comments:

  1. வாவ் இத்தனைத் தகவல்களா? கலக்குறீங்க தோழி.
    backyard birds என்ற நூல் நூலகத்தில் இருந்து எடுத்து நிறையக் கற்றுக் கொண்டேன் தோழி. நீங்களும் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.
      புத்தகம் குறித்து அறியத் தந்தமைக்கு நன்றிகள். நிச்சயம் பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.

      Delete