Monday, July 13, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி - நீர்ச்சுழல் - Whirlpool Aerocar







பள்ளத்தாக்கில் சென்று விழும் நீரில் ஏற்படும் நீர்ச் சுழலினை மேலிருந்து காண உருவாக்கப்படிருக்கும் அமைப்பு Whirlpool Aerocar. இதனை வடிவமைத்தவர்  ஸ்பானிஷ் நாட்டு பொறியாளர் லியனார்டோ டோரஸ் கியூவெடோ (Leonardo Torres Quevedo).

 கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்  மலைகளுக்கிடையேயான அகலத்தினை ஆறு வலிமையான கம்பி வடங்கள் (Cables) கொண்டு இணைத்துள்ளனர். அந்த கம்பி வடத்தில், Aerocar பயணிக்கிறது. இரு முனைகளுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். இத்தூரத்தினை கடக்க 10 நிமிடங்கள் ஆகும்.

வேகமாய் பிரவாகமெடுத்து ஓடும் நீர், சட்டென்று திசை மாறி ஓடும் நீர்ச் சுழல், என்று காணும் கண்களை வசீகரிக்கும் ஓர் இயற்கை நிகழ்வை உயரத்திலிருந்து காணும் வாய்ப்பினை வழங்குகிறது இந்த Whirlpool Aerocar.

மேலிருந்து பார்த்தால், ஓடும் நீர் நீலம் மற்றும் பச்சை கலந்த நிறங்களில் தெரிகிறது. இயற்கையாகவே, நயாகராவின் நீர் நீலம் - பச்சை நிறத்தில் இருக்கிறது. நீரின் நிறம் நாளுக்கு நாள் தட்பவெப்பம் மற்றும் மண்ணில் உள்ள வண்டலின் (Sediments) அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.  நீரின் நிறத்திற்கான இரண்டு காரணிகள் : நீரில் சூரிய ஒளி விலகல் (Refraction ) மற்றும் நீரிலுள்ள இருகூற்று நுண்பாசிகள் (Diatoms - microscopic plants such as algae and plankton in the water).  

ஈரி ஏரியில் ஏற்படும் புயலின் பின் நீரின் நிறம் இருண்ட பழுப்பு நிறம் (murky brown) ஆக மாறுகிறது. கீழே இருக்கும் வண்டல் மண்  கலக்கப்பட்டு, நீரினால் இழுத்து வரப்படுவதால், நீருக்கு இந்நிறம் ஏற்படுகிறது.


தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி,

niagarafallstourism.com
niagaraparks.com
niagarafrontier.com

2 comments:

  1. நிறைய தகவல்களுடன் படங்கள் எல்லாமும் சூப்பரா இருக்கு. நன்றி முகில்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர் வருகைக்கும் , ஊக்கமூட்டும் கருத்துரைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete