மலர்களில் ஊர்வலம் செல்லும் பட்டாம்பூச்சிகளின் எழில் வண்ணங்களையும், அவை சிறகு விரித்துப் பறக்கும் அழகினையும் இரசிக்காதவர் எவரும் உண்டோ ?
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கும் இந்த பட்டாம் பூச்சி களஞ்சியத்தில் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகள், பசுமையான சோலை அமைப்பினுள் பறந்து திரிகின்றன. மழைக் காடுகளைப் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி, சிறியதாக ஒரு குளத்தையும், நீர்வீழ்ச்சியும் அமைத்து, பட்டாம் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஓர் இனிய நந்தவனமாகவே இதனை அமைத்துள்ளனர். இந்த பசுஞ் சோலை அமைப்பினுள், பல வண்ண மலர்களையும் கண்டு இரசிக்கும் இனிய வாய்ப்பும் கிட்டியது.
உள்ளே நாம் சுற்றிப் பார்க்கையில், பட்டாம் பூச்சிகள் நம் மேல் அமர்வது போல நெருங்கி பறந்து வருகின்றன. பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும் வண்ணம், பிரகாசமான நிறங்களை உடைய ஆடைகளை அணிந்திருந்தால், பட்டாம் பூச்சிகள் நம் மீது வந்தமர்கின்றன. மேலும், நல்ல மணம் நிறைந்த வாசனை திரவியங்களை பூசி இருந்தாலும், அந்த வாசனையால் கவரப்பட்ட பட்டாம் பூச்சிகள் நம்மை நோக்கி வருகின்றன.
பழங்களை உண்ணும் பட்டாம்பூச்சிகள்
பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலரின் மொட்டு. அபார மணம் கொண்ட இம்மலர் இரவில் மட்டுமே மலரும்.
பழங்களின் மீதமர்ந்து அவற்றின் சாற்றினை பருகும் தன்மை வாய்ந்தனவாம் பட்டாம்பூச்சிகள். பழங்களை உண்ணும் பட்டாம்புச்சிகளின் கானொளி.
இது, அங்கிருக்கும் அனைத்து வகையான பட்டாம் பூச்சிகளின் புகைப்படம்.
இது, அங்கிருக்கும் அனைத்து வகையான பட்டாம் பூச்சிகளின் புகைப்படம்.
தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.
நன்றி,
சான்ஃப்ரான்சிஸ்கோவில் rain forest மாதிரியே தட்பவெப்ப நிலையைக் கொண்டுவந்து அங்குள்ள உயிரினங்களை வைத்திருக்கின்றனர். அதில் பட்டாம்பூச்சிகளும் அடக்கம்.
ReplyDeleteதகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி முகில்.
நான் இதுபோன்ற அமைப்புகளை சில Botanical Garden களில் பார்த்ததுண்டு. ஆனால், உயிரினங்களை வைத்து பார்ப்பது இது தான் முதல் முறை.
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.