Niagara's Fury - நயாகரா நீர்வீழ்ச்சி உருவான வரலாற்றை சொல்லும் 4D திரைப்படம்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஐஸ் ஏஜ் (Ice Age) முடியும் போது நீர்வீழ்ச்சி உருவான வரலாற்றை சிப் என்ற நீர்நாய் (Chip, the Beaver) தன் நண்பர்களுடன் சேர்ந்து சொல்வது போன்ற Animated திரைப்படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பனி, மழை, காற்று, புயல், மின்னல், இடி முழக்கம் என்று செயற்கையாக உருவாக்கி, நீர்வீழ்ச்சியினை நான்கு சுவர்களுக்குள் காணும் ஓர் அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகின்றனர்.
பனி பொழிவை சோப்பு நுரை கொண்டு உருவாக்கியிருந்தனர்.
Niagara's fury பற்றிய காணொளி. இணையத்தில் இருந்து எடுத்தது.
நன்றி, Youtube
https://www.youtube.com/watch?v=66RdkjU3nXo
அடுத்ததாக சென்றது, நயாகரா தாவரவியல் பூங்கா. நீர்வீழ்ச்சி எல்லாம் பார்த்து முடித்துவிட்டு கடைசியாக சென்றது. செல்வதற்கு முன் பூட்டி விட்டார்கள். அதனால், வெளியில் இருந்த சில மலர்களை மட்டும் படம் பிடித்தேன்.
அடுத்த பதிவாக நயாகரா சென்ற போது, ஆங்காங்கே கண்டு இரசித்த சில மலர்களின் புகைப்படங்களுடன், நயாகரா பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment