கொட்டும் நயாகரா அருவியை வெகு அருகில் சென்று அதன் சாரலில் நனைந்தபடி இரசிக்க கப்பல் பயணம். அதுவே, Hornblower Niagara Cruises. கொட்டும் நீர், அது ஏற்படுத்தும் குளிர்ந்த காற்று, பனிமூட்டம் , சோவெனக் கொட்டும் நீரின் ஓசை என இவையனைத்தையும் இரசிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது இந்த கப்பல் பயணம்.
பள்ளத்தாக்கினுள் ஓடும் நீரின் வழியாக குதிரை இலாட அருவி, அமெரிக்கன் அருவி, பிரைடல் வெய்ல் அருவி (Bridal Veil Falls) ( மணப்பெண் அணியும் முகத்திரை போல், சிறியதாக இருப்பதால், இந்த அருவிக்கு இப்பெயர் ) என்று மூன்று அருவிகளையும் இந்த கப்பலில் பயணித்தபடி கண்டு இரசிக்கலாம்.
நயாகரா ஆற்றில் செல்லும் கப்பல்.
இப்புகைப்படங்கள் கப்பல் பயணம் முடிந்து வெளியே வருகையில் எடுத்தது.
கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் கடல் புறா.
சாலையிலிருந்து காண்கையில் வானவில் பாலம் (Rainbow Bridge).
Skylon tower
கப்பல் பயணத்தின் போது இரசித்த அருவி.
நயாகராவின் அழகை மேலிருந்து இரசிக்க வாய்ப்பளிக்கும் ஹெலிகாப்டர் பயணம்.
படங்களும், வீடியோவும் நல்லாருக்கு முகில். என்ன ஒன்று, அடித்து விழும் தண்ணீரைப் பார்த்தால் உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம் :)
ReplyDeleteநன்றி முகில் !
மிக்க நன்றி தோழி.
Deleteதண்ணீருக்கு அருகில் செல்ல செல்ல அடிக்கும் காற்றிலும், சாரலின் தண்மையிலும் சற்றே நடுக்கம் தான். ஆனாலும், அதுவும் ஓர் இனிமையான அனுபவமே.
தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் பல தோழி.