நயாகரா நீர்வீழ்ச்சியை நேருக்கு நேராக முன்னிருந்து இரசித்து மகிழும் நமக்கு அதன் பின்னிருந்தும் இரசிக்க, அதன் சாரலில் நனைந்து மகிழ வாய்ப்பளிப்பது , இந்த பயணம், Journey Behind the Falls.
உயர்த்தி/இறக்கியில் (Elevator ) கீழிறங்கி சென்றால், குதிரை இலாட அருவியின் அடிப்பாகத்தைக் காணலாம். அதாவது, நமது தலைக்கு மேலிருந்து அருவி கொட்டுவதைக் கண்டு அனுபவிக்கலாம். இங்கிருந்து குதிரை இலாட அருவியின் ( Horse Shoe Falls) ன் மொத்த அழகையும், கண்கவர் நீல நிறத்தில் ஓடும் நயாகரா ஆற்றின் அழகையும் காணலாம்.
உயர்த்தி/இறக்கியை (Elevator ) விட்டு வெளியே வந்தால், சுரங்கப் பாதையின் (Tunnels)வழியாக, அருவியின் அழகை இரசிக்க அமைக்கப்பட்டிருக்கும் கவனிப்பு மேடைகளை ( Observation Decks) வந்தடையலாம்.
சுரங்கத்தினை குடைந்து, அங்கிருந்து கொட்டும் அருவியின் அழகை இரசிக்கும் வாய்ப்பினையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கொட்டும் நீரின் அழகை இரசித்து, சாரலில் நனைந்து மகிழ, rain coat போன்று கொடுக்கிறார்கள். Recyclable Plastic ஆல் ஆன இந்த rain coat போட்டுக் கொண்டு, நனையாது, அருவியின் அழகை இரசிக்கலாம். தெரிக்கும் நீரில் நனைய விரும்பாவிடில், இதை போட்டுக் கொண்டு, முகத்தை மட்டும் அடிக்கும் சாரலில் நனைத்துக் கொள்ளலாம்.
இப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி,
Journey_Behind_the_Falls
நயாகரா ஆற்றில் அருவி நோக்கி செல்லும் கப்பல் ( Cruise ). இடது பக்கம் தெரிவது Bridal Veil Falls. அது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சார்ந்தது.
கொட்டும் அருவி - நமக்கு வெகு அருகாமையில்.
நீல நிறத்தில் ஓடும் நயாகரா ஆறு.
அருகாமையில் கொட்டும் அருவி
குதிரை இலாட அருவியின் முழு தோற்றம்
பயன்மிகுந்த தகவல்கள், படங்களும், வீடியோக்களும் பார்க்கவே 'ஆஹா'ன்னுருக்கு. நன்றி முகில்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் பல தோழி.
Delete