Wednesday, July 15, 2015

Niagara Falls - Butterfly Conservatory - வண்ணத்துப் பூச்சிகள் களஞ்சியம்

மலர்களில் ஊர்வலம் செல்லும் பட்டாம்பூச்சிகளின் எழில் வண்ணங்களையும், அவை சிறகு விரித்துப் பறக்கும் அழகினையும் இரசிக்காதவர் எவரும் உண்டோ ?

நயாகரா  நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கும் இந்த பட்டாம் பூச்சி களஞ்சியத்தில் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகள், பசுமையான சோலை அமைப்பினுள் பறந்து திரிகின்றன. மழைக் காடுகளைப் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி, சிறியதாக ஒரு குளத்தையும், நீர்வீழ்ச்சியும் அமைத்து, பட்டாம் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஓர் இனிய நந்தவனமாகவே இதனை  அமைத்துள்ளனர். இந்த பசுஞ் சோலை அமைப்பினுள், பல வண்ண மலர்களையும் கண்டு இரசிக்கும் இனிய வாய்ப்பும் கிட்டியது.

உள்ளே நாம் சுற்றிப் பார்க்கையில், பட்டாம் பூச்சிகள் நம் மேல் அமர்வது போல நெருங்கி பறந்து வருகின்றன. பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும் வண்ணம், பிரகாசமான நிறங்களை உடைய ஆடைகளை அணிந்திருந்தால், பட்டாம் பூச்சிகள் நம் மீது வந்தமர்கின்றன. மேலும், நல்ல மணம் நிறைந்த வாசனை திரவியங்களை பூசி இருந்தாலும், அந்த வாசனையால் கவரப்பட்ட பட்டாம் பூச்சிகள் நம்மை நோக்கி வருகின்றன.








 பழங்களை உண்ணும் பட்டாம்பூச்சிகள்



பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலரின் மொட்டு. அபார மணம் கொண்ட இம்மலர் இரவில் மட்டுமே மலரும்.

பழங்களின் மீதமர்ந்து அவற்றின் சாற்றினை பருகும் தன்மை வாய்ந்தனவாம் பட்டாம்பூச்சிகள். பழங்களை உண்ணும் பட்டாம்புச்சிகளின் கானொளி. 

இது, அங்கிருக்கும் அனைத்து வகையான பட்டாம் பூச்சிகளின் புகைப்படம்.

தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.
நன்றி,

Tuesday, July 14, 2015

நயாகரா ஆற்றில் ஓர் கப்பல் பயணம் - Hornblower Niagara Cruises

கொட்டும் நயாகரா அருவியை வெகு அருகில் சென்று அதன் சாரலில் நனைந்தபடி இரசிக்க கப்பல் பயணம். அதுவே, Hornblower Niagara Cruises. கொட்டும் நீர், அது ஏற்படுத்தும் குளிர்ந்த காற்று, பனிமூட்டம் , சோவெனக் கொட்டும் நீரின் ஓசை என இவையனைத்தையும் இரசிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது இந்த கப்பல் பயணம்.

பள்ளத்தாக்கினுள் ஓடும் நீரின் வழியாக குதிரை இலாட அருவி, அமெரிக்கன் அருவி, பிரைடல் வெய்ல் அருவி (Bridal Veil Falls) ( மணப்பெண் அணியும் முகத்திரை போல், சிறியதாக இருப்பதால், இந்த அருவிக்கு இப்பெயர் ) என்று மூன்று அருவிகளையும் இந்த கப்பலில் பயணித்தபடி கண்டு இரசிக்கலாம்.




நயாகரா ஆற்றில் செல்லும் கப்பல்.


இப்புகைப்படங்கள் கப்பல் பயணம் முடிந்து வெளியே வருகையில் எடுத்தது.

கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் கடல் புறா. 



சாலையிலிருந்து காண்கையில் வானவில் பாலம் (Rainbow Bridge).
Skylon tower

கப்பல் பயணத்தின் போது இரசித்த அருவி.

அருவிக்கு வெகு அருகில் செல்கையில், அருவியின் சாரல் நம்மையும் நனைத்து மகிழ்விக்கிறது.


நயாகராவின் அழகை மேலிருந்து இரசிக்க  வாய்ப்பளிக்கும் ஹெலிகாப்டர் பயணம்.


Monday, July 13, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி - நீர்ச்சுழல் - Whirlpool Aerocar







பள்ளத்தாக்கில் சென்று விழும் நீரில் ஏற்படும் நீர்ச் சுழலினை மேலிருந்து காண உருவாக்கப்படிருக்கும் அமைப்பு Whirlpool Aerocar. இதனை வடிவமைத்தவர்  ஸ்பானிஷ் நாட்டு பொறியாளர் லியனார்டோ டோரஸ் கியூவெடோ (Leonardo Torres Quevedo).

 கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்  மலைகளுக்கிடையேயான அகலத்தினை ஆறு வலிமையான கம்பி வடங்கள் (Cables) கொண்டு இணைத்துள்ளனர். அந்த கம்பி வடத்தில், Aerocar பயணிக்கிறது. இரு முனைகளுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். இத்தூரத்தினை கடக்க 10 நிமிடங்கள் ஆகும்.

வேகமாய் பிரவாகமெடுத்து ஓடும் நீர், சட்டென்று திசை மாறி ஓடும் நீர்ச் சுழல், என்று காணும் கண்களை வசீகரிக்கும் ஓர் இயற்கை நிகழ்வை உயரத்திலிருந்து காணும் வாய்ப்பினை வழங்குகிறது இந்த Whirlpool Aerocar.

மேலிருந்து பார்த்தால், ஓடும் நீர் நீலம் மற்றும் பச்சை கலந்த நிறங்களில் தெரிகிறது. இயற்கையாகவே, நயாகராவின் நீர் நீலம் - பச்சை நிறத்தில் இருக்கிறது. நீரின் நிறம் நாளுக்கு நாள் தட்பவெப்பம் மற்றும் மண்ணில் உள்ள வண்டலின் (Sediments) அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.  நீரின் நிறத்திற்கான இரண்டு காரணிகள் : நீரில் சூரிய ஒளி விலகல் (Refraction ) மற்றும் நீரிலுள்ள இருகூற்று நுண்பாசிகள் (Diatoms - microscopic plants such as algae and plankton in the water).  

ஈரி ஏரியில் ஏற்படும் புயலின் பின் நீரின் நிறம் இருண்ட பழுப்பு நிறம் (murky brown) ஆக மாறுகிறது. கீழே இருக்கும் வண்டல் மண்  கலக்கப்பட்டு, நீரினால் இழுத்து வரப்படுவதால், நீருக்கு இந்நிறம் ஏற்படுகிறது.


தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி,

niagarafallstourism.com
niagaraparks.com
niagarafrontier.com

Friday, July 10, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி - நீர்வீழ்ச்சியினை அதன் பின்புறம் இருந்து இரசிக்க ஓர் வாய்ப்பு - Journey Behind the falls

நயாகரா நீர்வீழ்ச்சியை நேருக்கு நேராக முன்னிருந்து இரசித்து மகிழும் நமக்கு அதன் பின்னிருந்தும் இரசிக்க, அதன் சாரலில் நனைந்து மகிழ வாய்ப்பளிப்பது  , இந்த பயணம், Journey Behind the Falls.

உயர்த்தி/இறக்கியில் (Elevator ) கீழிறங்கி சென்றால், குதிரை இலாட அருவியின் அடிப்பாகத்தைக் காணலாம். அதாவது, நமது தலைக்கு மேலிருந்து அருவி கொட்டுவதைக் கண்டு அனுபவிக்கலாம். இங்கிருந்து குதிரை இலாட அருவியின் ( Horse Shoe Falls) ன் மொத்த அழகையும், கண்கவர் நீல நிறத்தில் ஓடும் நயாகரா ஆற்றின் அழகையும் காணலாம்.

உயர்த்தி/இறக்கியை  (Elevator ) விட்டு வெளியே வந்தால், சுரங்கப் பாதையின் (Tunnels)வழியாக, அருவியின் அழகை இரசிக்க அமைக்கப்பட்டிருக்கும் கவனிப்பு மேடைகளை ( Observation Decks) வந்தடையலாம்.

சுரங்கத்தினை குடைந்து, அங்கிருந்து கொட்டும் அருவியின் அழகை இரசிக்கும் வாய்ப்பினையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கொட்டும் நீரின் அழகை இரசித்து, சாரலில் நனைந்து மகிழ, rain coat போன்று கொடுக்கிறார்கள்.  Recyclable Plastic ஆல் ஆன இந்த rain coat போட்டுக் கொண்டு, நனையாது, அருவியின் அழகை இரசிக்கலாம். தெரிக்கும் நீரில் நனைய விரும்பாவிடில், இதை போட்டுக் கொண்டு, முகத்தை மட்டும் அடிக்கும் சாரலில் நனைத்துக் கொள்ளலாம்.

                           கொட்டும் நயாகரா - சுரங்கத்தின் வழியாக தெரியும் காட்சி.
இப்படம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி,
Journey_Behind_the_Falls




 நயாகரா ஆற்றில் அருவி நோக்கி செல்லும் கப்பல் ( Cruise ). இடது பக்கம் தெரிவது Bridal Veil Falls. அது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சார்ந்தது.


கொட்டும் அருவி - நமக்கு வெகு அருகாமையில்.

  நீல நிறத்தில் ஓடும் நயாகரா ஆறு.


அருகாமையில் கொட்டும் அருவி

குதிரை இலாட அருவியின் முழு தோற்றம்

Thursday, July 9, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி - குதிரை இலாட அருவி (Horse Shoe Falls)

White Water Walk பார்த்துவிட்டு, அடுத்ததாக சென்றது, Horse Shoe Falls.  இந்த அருவியின் வடிவம் குதிரையின் இலாடம் போன்று இருப்பதால், இதற்கு குதிரை இலாட அருவி ( Horse Shoe Falls ) என்று பெயர். 

                                 

இந்த Horse Shoe Falls ற்கு எதிரில் இருப்பது, Table Rock Welcome Centre. நயாகரா அருவியின் வரவேற்பு மையம். இங்கு, மற்ற இடங்களுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டுகள், 4 D திரைப்படம் (Niagara's fury), மேலிருந்து கொட்டும் நயாகரா அருவியின் அழகை கீழிருந்து இரசிக்க கவனிப்பு மேடைகள் (Journey Behind the Falls) இவையனைத்தும் இருக்கின்றன. இவற்றைக் குறித்து அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.



வரவேற்பு மையத்தின் எதிரில் இருந்து பார்த்தால், கனடாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் தெரியும். இந்தப் பாலம் Niagara Falls International Rainbow Bridge என்றழைக்கப் படுகிறது. கப்பலில் (Cruise) செல்கையில், இந்த பாலத்தின் கீழ் அழகான வானவில் தெரியும்.

Wednesday, July 8, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி ( Niagara Falls, Ontario, Canada ) - White Water Walk

அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.

இத்தகவல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.


 நயாகராவிற்கு செல்லும் Go Transit இரயில்.

தரையிலிருந்து 70 அடி தூரத்திற்கு, உயர்த்தி/ இறக்கியில் ( Elevator) கீழிறங்கி, பின் சுரங்கப் பாதை வழியாக 73 அடி நடந்தால், 305 அடி தூரமுள்ள படிகளுடன் கூடிய போர்ட் வாக் ( Board Walk ).

சுரங்கப் பாதை
 இப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி, yelp.com



ஓடும் நயாகரா ஆற்றினை இரசிக்க, இரண்டு மரத்தாலான மேடைகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இவ்வாற்றில் ஓடும் நீரின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 48 கிலோ மீட்டர் ஆகும்.



மேலே இருக்கும் இரண்டு படங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.

நன்றி, இணையம்.
niagaraparks.com



இந்த மர மேடையிலிருந்து பார்த்தால், 410 மில்லியன் வருட பழமை வாய்ந்த நயாகரா பள்ளத்தாக்கின்  ( Niagara Gorge ) கற்பாறை அடுக்குகளை காணலாம்.


நயாகரா நீர்வீழ்ச்சியின் White Water Walk ற்கு எதிரில் இருக்கும் பத்தாயிரம் புத்தர் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.


இக்கோயில் சாம் - ஷான்  கோயில் (Cham Shan Temple) என்றும் அழைக்கப் படுகிறது.